Siddharth; கன்னத்தில் முத்தமிட்டால் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் சித்தார்த் இன்று தனது 41 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
சித்தார்த் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
கடந்த 1979 ஆம் ஆண்டு ஏப்ரல் 17 ஆம் தேதி சென்னையில் பிறந்தவர் நடிகை சித்தார்த். இவரது இயற்பெயர் சித்தார்த் சூரியநாராயணன்.
பிஸினஸ் மேனேஜ்மெண்ட் பிரிவில் பட்டம் பெற்றுள்ளார். அதன் பிறகு சினிமா மோகத்தால் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக பணியாற்றினார்.
ஷங்கர் இயக்கத்தில் சித்தார்த் நடிப்பில் வந்த பாய்ஸ் படத்திலும் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார்.
மணிரத்னம் இயக்கத்தில் மாதவன், த்ரிஷா, சித்தார்த், மீரா ஜாஸ்மின் ஆகியோரது நடிப்பில் வந்த ஆயுத எழுத்து படம் விமர்சன ரீதியாகவும், வணீக ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது.
இதையடுத்து தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் ஆயுத எழுத்து படம் ரிலீஸ் செய்யப்பட்டது.
ஒரு நடிகரோரு இல்லாமல், உதவி இயக்குநர், டப்பிங் ஆர்டிஸ்ட், தயாரிப்பாளர் மற்றும் பின்னணி பாடகராகவும் திகழ்கிறார்.
கடந்தாண்டு இவரது நடிப்பில் வந்த சிவப்பு மஞ்சள் பச்சை படம் விமர்சன மற்றும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு பெற்றது.
அருவம் படம் ஒரு சிறந்த உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி எப்படி இருக்க வேண்டும் என்பதை அவரது மூலமாக இந்த உலகிற்கு எடுத்துக் காட்டிய சமூக அக்கறை கொண்ட படம்.
இதே போன்று தான் சிவப்பு மஞ்சள் பச்சை படமும், சமூக அக்கறை கொண்ட படமாக உருவாக்கப்பட்டது. போக்குவரத்து விதிகளை பின்பற்றி நடக்கும் ஒரு பழக்கத்தை சமூகத்தில் வெளிக்காட்டியது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் இன்று தனது 41 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
அவருக்கு சினிமா பிரபலங்கள், நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் என்று பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.