Home சினிமா கோலிவுட் சிம்பு – த்ரிஷா பேசும் கார்த்திக் டயல் செய்த எண் குறும்படம் வெளியீடு!

சிம்பு – த்ரிஷா பேசும் கார்த்திக் டயல் செய்த எண் குறும்படம் வெளியீடு!

389
0
Karthik Dial Seytha Yenn Shortfilm

Karthik Dial Seytha Yenn; சிம்பு – த்ரிஷா பேசும் கார்த்திக் டயல் செய்த எண் குறும்படம் வெளியீடு! சிம்பு மற்றும் த்ரிஷா இருவரும் பேசிக் கொள்ளும் கார்த்திக் டயல் செய்த எண் என்ற குறும்படத்தின் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கௌதம் மேனனின் கார்த்திக் டயல் செய்த எண் என்ற குறும்படத்தின் வீடியோ வெளியாகியுள்ளது.

இயக்குநர் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, த்ரிஷா, விடிவி கணேஷ் ஆகியோர் பலரது நடிப்பில் கடந்த 2010 ஆம் ஆண்டு திரைக்கு வந்த படம் விண்ணைத்தாண்டி வருவாயா.

இந்தப் படத்தில் சமந்தா, நாக சைதன்யா ஆகியோர் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தனர்.

ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற இப்படத்தின் 2 ஆம் பாகம் உருவாக இருப்பதாக கூறப்பட்டது. எனினும், இது குறித்து எந்த அறிவிப்பும் தற்போது வெளியாகவில்லை.

இந்த நிலையில், தற்போது கொரோனா லாக்டவுன் காரணமாக அனைவருமே வீட்டிலேயே இருக்கும் நிலையில், இயக்குநர் கௌதம் மேனன் ஒரு குறும்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கார்த்திக் டயல் செய்த எண் என்ற அந்த குறும்படத்தில் சிம்பு மற்றும் த்ரிஷா இருவரும் நடித்துள்ளனர். இது விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் 2 ஆம் பாகம் போன்று தோன்றுகிறது.

இந்த கொரோனா லாக்டவுன் காரணமாக தனித்தனியாக வசித்து வரும் சிம்பு மற்றும் த்ரிஷா இருவரும் மொபைல் போனில் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்கின்றனர்.

த்ரிஷாவிற்கு போன் போட்டு நீ கேரளாவில் இருப்பது எனக்கு தெரியும், உன் அக்காவின் ஃபேஸ்புக் போஸ்ட் மூலமாக தெரிந்து கொண்டேன். அதில், மாஸ்க் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

அந்த போட்டோவில் பின்னாடி உன்னையும் பார்த்தேன். ஏன் சொல்லவில்லை. எப்போது வந்த என்று சிம்பு கேட்பது போன்றும், அதற்கு த்ரிஷா பதிலளிப்பது போன்றும் முதலில் காட்டப்பட்டுள்ளது.

இருவருமே லாக்டவுன் பற்றி தான் முதலில் பேசிக்கொள்கிறார்கள். அதன் பிறகு, இருவரும் காதல் கதை பற்றி பேசுகின்றனர்.

எழுது, உன்னுடைய எழுத்தில் அவ்வளவு அழகு இருக்கிறது. நீ ஒரு கலைஞன். எல்லாமே சரியாகிவிடும். திரையரங்குகள் திறக்கப்படும். இப்போது நெட்பிளிக்ஸ், அமேசான் என்று எல்லாமே இருக்கிறது.

அவர்கள் எல்லாமே உன்னை தேடி வருவார்கள் என்று பேசுவதோடு அந்த வீடியோ முடிகிறது.

த்ரிஷா நடித்துள்ள இந்த குறும்படம் சிம்புவின், விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இரண்டாம் பாகம் போல் உணர முடிகிறது. காரணம் கார்த்திக் கதாபாத்திரத்துடன் ஜெஸி பேசுகிறார்.

இந்த குறும்படம் குறித்து இயக்குநர் கௌதம் மேனன் கூறுகையில், விண்ணைத்தாண்டி வருவாயா 2 படத்தின் ஒரு பகுதி தான் இந்த குறும்படம். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here