Suresh Kamatchi; சிம்புவின் மாநாடு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஃபெப்சிக்கு பொருளுதவி! மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சு ஃபெப்சி தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் 25 கிலோ எடைகொண்ட 50 அரிசி மூட்டைகளை வழங்கியுள்ளார்.
தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஃபெப்சி தொழிலாளர்களுக்கு 50 அரிசி மூட்டைகளை வழங்கியுள்ளார்.
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. கனடா பிரதமரின் மனைவி, பிரிட்டன் இளவரசர், பிரிட்டன் பிரதமர், ஸ்பெயின் இளவரசி போன்றோரும் இந்தக் கொரோனா தொற்றால் பாதித்துள்ளார்கள்.
பல நாட்டு அரசாங்கங்கள் என்ன செய்வதென்றே தெரியாமல் திணறி வருகிறார்கள். குறிப்பாக அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகள் பல பாதிப்புகளை அடைந்துள்ளது.
நூற்றுக்கும் மேற்பட்ட உலக நாடுகளையும் கடந்து கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளார். இந்தியாவில் மட்டும் 206 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர்.
எனினும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 21 நாட்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.
அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே மக்கள் வெளியில் செல்கின்றனர். அதையும் மீறி வெளியில் செல்வோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவு காரணமாக சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன.
இதன் காரணமாக சினிமா தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
அவர்களுக்கு உதவும் வகையில், நடிகர், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், தொலைக்காட்சி சேனல் உரிமையாளர்கள் என்று அனைவரும் தங்களால் முடிந்த நிதியுதவி, பொருளுதவி அளித்து வருகின்றனர்.
அந்த வகையில், கமல் ஹாசன், ரஜினிகாந்த், சிவகார்த்திகேயன், சூர்யா குடும்பத்தினர், ராகவா லாரன்ஸ், அஜித், நயன்தாரா, சூரி, விஜய் சேதுபதி, ஜெயம் ரவி, பார்த்திபன், பிரகாஷ் ராஜ் என்று பலரும் உதவி செய்துள்ளனர்.
இவர்களது வரிசையில், தற்போது மாநாடு படத்தின் தயாரிப்பாளரான சுரேஷ் காமாட்சி ஃபெப்சி தொழிலாளர்களுக்கு 25 கிலோ கொண்ட அரிசி மூட்டை வீதம் 50 அரிசி மூட்டைகளை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.