Home சினிமா கோலிவுட் யாரும் நம்பாதீங்க: திருமணம் பற்றி சிம்புவின் பெற்றோர் அறிக்கை!

யாரும் நம்பாதீங்க: திருமணம் பற்றி சிம்புவின் பெற்றோர் அறிக்கை!

0
317
Simbu Marriage

Simbu Marriage; யாரும் நம்பாதீங்க: திருமணம் பற்றி சிம்புவின் பெற்றோர் அறிக்கை! சிம்புவிற்கு திருமணம் நடக்க இருப்பதாக வெளியான செய்தி குறித்து அவரது பெற்றோர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

சிம்புவின் திருமணம் பற்றி வெளியான செய்தி வெறும் வதந்தி என்று அவரது பெற்றோர் டி ராஜேந்தர் மற்றும் உஷா ராஜேந்தர் இணைந்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரவாக இருப்பவர் சிம்பு. தற்போது இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் மாநாடு படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். வி ஹவுஸ் புரோடக்‌ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி இந்தப் படத்தை தயாரிக்கிறார்.

சிம்புவிற்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷினியும், வில்லனாக எஸ்.ஜே.சூர்யாவும் நடிக்கின்றனர். மேலும், மனோஜ், டேனியல், எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகியோர் பலரும் நடிக்கின்றனர்.

அப்துல் காலிக் என்ற இஸ்லாமிய இளைஞராக சிம்பு இந்தப் படத்தில் நடிக்கிறார். சென்னையில் நடந்து வந்த படப்பிடிப்பைத் தொடர்ந்து, 2ம் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியது.

ஆனால், கொரோனா லாக்டவுன் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. படக்குழுவினரும் சென்னை திரும்பினர்.

இந்த நிலையில், சிம்புவிற்கும், லண்டனைச் சேர்ந்த கோடீஸ்வர வீட்டு பெண்ணிற்கும் திருமணம் பேசி முடிக்கப்பட்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது. சிம்பு திருமணம் செய்து கொள்ள இருக்கும் பெண், அவருக்கு தூரத்து உறவுக்குக்கார பெண் என்றும் கூறப்படுகிறது.

கொரோனா வைரஸ் பிரச்சனை முடிந்த பிறகு சிம்புவின் திருமணம் நடைபெறும் என்று செய்தி வெளியானது.

இந்த நிலையில், இது குறித்து சிம்புவின் பெற்றோர் டி ராஜேந்தர் மற்றும் உஷா ராஜேந்தர் இருவரும் கூட்டாக இணைந்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அதில், எங்கள் மூத்த மகன் சிலம்பரசன் திருமணம் பற்றி பத்திரிக்கைகளிலும், இணையதளங்களிலும் தவறான செய்திகள் வெளியாகி வருகின்றன. இப்படி வரும் செய்திகளில் உண்மை இல்லை.

சிலம்பரசன் ஜாகத்திற்கு பொருத்தமான பெண்ணை பார்த்துக் கொண்டிருக்கிறோம். அவருக்கு ஏற்ற பெண் அமைந்ததும், முதலில் பத்திரிக்கை வாயிலாக உங்களுக்கு அதிகாரப்பூர்வமாக நாங்களே தெரியப்படுத்துவோம்.

அதுவரை வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம் என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here