Home சினிமா கோலிவுட் சிம்ரனுக்கு முத்தம் கொடுப்பது யார்? வைரலாகும் வீடியோ

சிம்ரனுக்கு முத்தம் கொடுப்பது யார்? வைரலாகும் வீடியோ

654
0
simran kiss video

சிம்ரனுக்கு முத்தம் கொடுப்பது யார்?: வைரலாகும் வீடியோ! simran kiss video நடிகை சிம்ரனுக்கு சிறுவன் ஒருவன் முத்தம் கொடுக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

simran kiss video: அந்த சிறுவன் சிம்ரனின் மகன். தனது அம்மாவிற்கு முத்தம் கொடுத்த சிம்ரனின் மகன் டிக் டாக் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை சிம்ரன். 1990 ஆம் ஆண்டு பிற்பகுதிகளில் நடிக்க ஆரம்பித்தவர்.

அஜித், விஜய், பிரசாந்த், சரத்குமார் என்று முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். எல்லா நடிகைகளைப் போன்று திருமணத்திற்கு சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார்.

அதன் பிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் வந்த சீமராஜா படத்தில் வில்லியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

அப்புறம் என்ன, ரஜினியின் பேட்ட படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். அண்மையில், நடந்து முடிந்த மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் நடனம் ஆடி ரசிகர்களை கவர்ந்தார்.

ஒரு காலத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த நடிகை, தற்போது சினிமா வாய்ப்பில்லாமல், மேடைகளில் நடனம் ஆடும் நிலை ஏற்பட்டது என்று பலரும் விமர்சனம் செய்தனர்.

இந்த நிலையில் கொரோனா லாக்டவுன் காரணமாக பிரபலங்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கியிருக்கும் நிலை வந்துவிட்டது.

அந்த வகையில், வீட்டில் இருக்கும் நடிகை சிம்ரன், தனது மகனுடன் இணைந்து டிக் டாக் வீடியோவில் நடித்துள்ளார்.

அதில், இருவரும் மாறி மாறி முத்தம் கொடுத்துக் கொள்ளும் வீடியோ இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதற்கு முன்னதாக நடிகை த்ரிஷா, தனது த்ரிஷா கிருஷ்ணன் என்ற டிக் டாக் அக்கவுண்டிலிருந்து வீடியோ வெளியிட்டு வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு டான்ஸ் வீடியோ வெளியிட்டிருந்தார்.

Previous articleவிஜய் சேதுபதியின் டுவிட்டரில் போலி பதிவு: வைரலாகும் டுவீட்!
Next articleசிம்ரனின் நம்பர் கவுண்டிங்: வைரலாகும் வீடியோ!
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here