Simran; தமிழர்களுக்கு நன்றிக்கடன் பட்டவளாக இருப்பேன்: சிம்ரன்! நான் எப்போதும், தமிழுக்கும், தமிழர்களுக்கும் நன்றிக்கடன் பட்டவளாகவே இருப்பேன் என்று நடிகை சிம்ரன் தெரிவித்துள்ளார்.
முன்னணி நடிகையாக இருந்த சிம்ரன், தான் எப்போதும் தமிழுக்கும், தமிழர்களுக்கும் நன்றிக்கடன் பட்டவளாக இருப்பேன் என்று கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில், பிரபுதேவா, அப்பாஸ், ரம்யா ஆகியோரது நடிப்பில் கடந்த 1997 ஆம் ஆண்டு திரைக்கு வந்த விஐபி என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சிம்ரன்.
இந்தப் படத்தைத் தொடர்ந்து, ஒன்ஸ்மோர், நேருக்கு நேர், பூச்சூடவா, அவள் வருவாளா, நட்புக்காக, வாலி, கண்ணுபட போகுதய்யா, ப்ரியமானவளே, ஒற்றன், ஏழுமலை, கண்ணத்தில் முத்தமிட்டால் என்று வரிசையாக ஏராளமான சூப்பர்ஹிட் படங்களில் நடித்துள்ளார்.
சினிமாவில் அறிமுகமாகி 23 ஆண்டுகள் ஆகியுள்ளது. தமிழைத் தவிர, தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார்.
கடந்த 2003 ஆம் ஆண்டு தீபக் பகா என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், சினிமாவிற்கு வந்து 23 ஆண்டுகள் ஆகியுள்ளது குறித்து சமூக வலைதளங்களில் நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.
ஒன்ஸ்மோர் படத்தில் சிவாஜி கணேசனுடன் இணைந்து நடித்ததை இப்போது நினைக்கும் போது கூட மகிழ்ச்சியாக இருக்கிறது.
அவரிடம் இருந்து ஆசீர்வாதம் கிடைத்தது. விஜய், பிரபுதேவா, ரம்பா, அப்பாஸ் ஆகியோருடன் இணைந்து நடித்தது எனது அதிர்ஷ்டம்.
எனது கடைசி மூச்சிவரை தமிழுக்கும், தமிழர்களுக்கும் நன்றிக்கடன் பட்டவளாக இருப்பேன் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.