சிவா இயக்கத்தில் அண்ணாத்த ஆகிறார் சூப்பர் ஸ்டார். ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தின் பெயர் அண்ணாத்த என அறிவித்துள்ளனர்.
அண்ணாத்த ஆடுறார் ஒத்திக்கோ
கடந்த பொங்கல் முந்தைய வாரம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான தர்பார் படம் மக்களிடையே கலவையான விமர்சனம் வந்தாலும் நல்ல வரவேற்ப்பை பெற்றது.
சிறுத்தை, வீரம், வேதாளம், விவேகம் மற்றும் விஸ்வாசம் படங்களை இயக்கிய சிறுத்தை சிவாவுடன் கடந்த ஆண்டு இறுதியில் கைகோர்த்தார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.
சிவா இயக்கத்தில் தனது 168-வது படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். இந்தப் படத்தை கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் தயாரித்துக் கொண்டு இருக்கிறது.
நேற்று பிப்ரவரி 24-ஆம் தேதி மாலை இந்த படத்தின் பெயர் வெளியிடப்பட்டது. “அண்ணாத்த” என்று படத்திற்கு பெயர் சூட்டப்பட்டு படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி மக்களிடைய பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
கடந்த 31 ஆண்டுகளுக்கு முன்பு சிங்கீதம் சீனிவாசா ராவ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் மூன்று வேடத்தில் நடித்து இளையராஜா இயக்கத்தில் வெளியான அபூர்வ சகோதரர்கள் படத்தில் இடம்பெற்ற “அண்ணாத்த ஆடுறார் ஒத்திக்கோ” பாடல் மக்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றது.
படத்தின் பெயர் வெளியானதும் சமூக வலைத்தளங்களில் ட்ரண்ட் ஆகவே இருந்து வந்தது. சூப்பர் ஸ்டார்க்கு நிகர் அவர் மட்டுமே என அவரின் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
அமைதி காக்கும் சூப்பர் ஸ்டார்
எத்தனை விமர்சனம் வந்தாலும் அதற்கு அமைதி காப்பதே சூப்பர் ஸ்டாரின் நல்ல பண்புகளில் ஒன்று.
நாம்மில் சிலர் அடுத்த சூப்பர்ஸ்டார் யார் என்று விவாதங்கள் செய்தாலும் அவருக்கு ஈடிணை யாரும் கிடையாது என்பதே நிதர்சனமான உண்மை.
கதை அம்சம் படத்தில் குறைவாக இருந்தாலும் தலைவர் மாஸ்-க்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும். 2.ஓ பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்டு ரசிகர்களை ஏமாற்றியது.
இருந்தும் பேட்ட மற்றும் தர்பார் மீண்டும் சூப்பர் ஸ்டார் ரஜினி மட்டுமே என்று சொல்லி அடித்தது. சூப்பர் ஸ்டார் படத்தின் பெயர் எப்போதும் குழந்தை முதல் பெரியவர்கள் வரை கவரக்கூடியதாகவே இருக்கும்.
ரஜினி நடிக்கும் அண்ணாத்த படத்தில் டி.இமான் இசை அமைக்கிறார். மேலும் கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பூ, சூரி, சதீஷ், பிரகாஷ்ராஜ் நடிக்கிறார்கள். இந்த படத்தை ஏப்ரல் மாதம் வெளியிட முடிவு செய்து இருக்கிறார்கள்.