Home சினிமா 2.ஓ டீசர் – ரசிகர்களை ஏமாற்றிய ஷங்கர்

2.ஓ டீசர் – ரசிகர்களை ஏமாற்றிய ஷங்கர்

397
1
2.ஓ டீசர்

2.ஓ டீசர் விநாயகர் சதுர்த்தியான நேற்று யூடியூப் வலைதளத்தில் வெளியிடப்பட்டது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.

2.ஓ தமிழ் டீசர், இதுவரை 9 மில்லியன் பார்வையாளர்களைத் தாண்டியுள்ளது. இந்த டீசர் பலரால் பாராட்டப் பெற்றாலும், ரசிகர்கள் மத்தியில் கொஞ்சம் அதிருப்தியை உருவாக்கியுள்ளது.

காரணம், இது ஒரு வருடம் முன்பே வெளியிடப்பட்ட டீசர். துபாயில் நடந்த 2.0 இசை வெளியீட்டின் போதே, இந்த டீசர் திரையிடப்பட்டு விட்டது.

திரையிட்டபோதே, மொபைலில் படம் பிடிக்கப்பட்டு சில நாட்கள் கழித்து இணையத்திலும் கசிந்தது. அந்த டீசரை அதிகாரப்பூர்வமாக வெளியிட ஷங்கர் ஒரு வருடம் எடுத்துக்கொண்டு உள்ளார்.

புதிய காட்சிகளுடன் 2.o டீசர் வெளியாகும் என நினைத்த ரசிகர்களுக்கு சிறிய ஏமாற்றம். இருப்பினும் 3D டீசரை திரையரங்குகளில், ரசிகர்கள் உற்சாகமாக கண்டுகளிப்பது ஆறுதலான விஷயம்.

விரைவில் சங்கர் படத்தின் ட்ரைலரை புதிய காட்சிகளுடன் வெளியிட வேண்டும் என ரசிகர்களை அன்புடன் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Previous articleவிஜய் மல்லைய்யா பாஜகவின் பலி ஆடு
Next articleTeaser Mistake 2 0 | 2.ஓ டீசர் குறைகள்
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here