Hero Movie; தடைகளை தாண்டி வெற்றி கொள்பவனே ஹீரோ: HeroOnSunTV! சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ஹீரோ படம் வரும் 24 ஆம் தேதி சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
சன் டிவியில் ஹீரோ படம் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி திரைக்கு வந்த படம் ஹீரோ.
இந்தப் படத்தின் மூலம் நடிகை கல்யாணி பிரியதர்ஷினி நடிகையாக அறிமுகமானார். மேலும், ஆக்ஷன் கிங் அர்ஜூன், ரோபோ ஷங்கர், ப்ரேம், அழகம் பெருமாள் ஆகியோர் உள்பட ஏராளமானோர் நடித்திருந்தனர்.
சூப்பர் ஹீரோ கதையை மையப்படுத்திய இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோவாக நடித்திருந்தார். எனினும், இந்தப் படத்திற்கு அப்படி ஒன்றும் வரவேற்பு கிடைக்கவில்லை.
இந்த நிலையில், இந்தியத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக திரைக்கு வந்த சில மாதங்களே ஆன ஹீரோ திரைப்படம் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
வரும் 24 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.