Home சினிமா கோலிவுட் முதல் முறையாக இரட்டை வேடம் எடுக்கும் சிவகார்த்திகேயன்!

முதல் முறையாக இரட்டை வேடம் எடுக்கும் சிவகார்த்திகேயன்!

324
0
Sivakarthikeyan Dual Role

Sivakarthikeyan Dual Role; முதல் முறையாக இரட்டை வேடம் எடுக்கும் சிவகார்த்திகேயன்! தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் சிவகார்த்திகேயன் முதல் முறையாக இரட்டை வேடங்களில் நடிக்க இருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்கும் புதிய படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்க இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் எம்ஜிஆர் காலம் முதல் இன்று வரை நடிகர்கள் பலரும் இரட்டை வேடங்களில் நடிப்பதற்கு அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

எம்ஜிஆர், சிவாஜி கணேசன், கமல் ஹாசன், ரஜினிகாந்த், அஜித், விஜய், சரத்குமார், விஜயகாந்த், பிரசாந்த், விக்ரம், கவுண்டமனி, செந்தில், விவேக் என்று பலரும் இரட்டை வேடங்களில் நடித்துள்ளனர்.

இன்றைய காலகட்டத்தில் வளர்ந்து வரும் நடிகர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதோடு, எடுத்த முதல் படத்திலேயே சூப்பர் ஸ்டார் ரேஞ்சுக்கு நடிப்பதால், அவர்கள் வந்த வேகத்தில் வெளியேறிவிடுகின்றனர்.

தொடர்ந்து காமெடியனாக நடித்து வந்த சந்தானம் கூட ஹீரோவாக வலம் வந்த பிறகு தற்போது டிக்கிலோனா படத்தில் 3 வேடங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் சிவகார்த்திகேயன் முதல் முறையாக இரட்டை வேடங்களில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.

ஏராளமான ஹிட் படங்களை கொடுத்தவர் சிவகார்த்திகேயன். இவ்வளவு ஏன் பெண் வேடங்களில் கூட நடித்துள்ளார். ஆனால், இரட்டை வேடங்களில் நடித்தது இல்லை.

தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான், டாக்டர் ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. இந்த இரு படங்களின் படப்பிடிப்பும் கொரோனா லாக்டவுன் முடிந்த பிறகு முடிந்துவிடும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்க இருக்கும் புதிய படத்தை அட்லியிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய அசோக் என்பவர் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்தப் படத்தில் தான் சிவகார்த்திகேயன் முதல் முறையாக இரட்டை வேடங்களில் நடிக்க இருக்கிறாராம். இதற்கு முன்னதாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வந்த ரஜினிமுருகன் கடைசி ஒரு காட்சியில் இரட்டை வேடங்களில் வந்திருப்பார்.

தற்போது அறிமுக இயக்குநர் அசோக் இயக்கயிருக்கும் புதிய படத்தில் முழுமையாக இரட்டை வேடங்களில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். விரைவில், இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது. மேலும், இப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் குறித்து பின்னர் அறிவிக்கப்பட இருக்கிறது.

SOURCER SIVAKUMAR
Previous articleஇப்போவே 5 மாசம் ஆச்சு: கர்ப்பமாக இருக்கிறேன்: மைனா நந்தினி!
Next articleவிஜய் சேதுபதியின் க/பெ.ரணசிங்கம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியீடு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here