Home சினிமா கோலிவுட் கொக்கி குமாராக அரசியலுக்கு வரும் தனுஷ்!

கொக்கி குமாராக அரசியலுக்கு வரும் தனுஷ்!

327
0
Pudhupettai 2

Pudhupettai 2; புதுப்பேட்டை 2 படத்தின் முக்கியமான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

தனுஷ் Dhanush நடிக்கும் புதுப்பேட்டை 2 (Pudhupettai 2) படத்தின் அப்டேட் வெளிவந்துள்ளது.

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான படம் புதுப்பேட்டை.

இப்படத்தில் தனுஷ் கொக்கி குமார் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றார்.

புதுப்பேட்டையில் சாதாரண ஒரு வாலிபராக தனது வாழ்க்கையை தொடங்கிய கொக்கி குமார் அதன் பிறகு கேங்ஸ்டராக மாறுவது தான் இப்படம்.

புதுப்பேட்டை படத்தில் சினேகா மற்றும் சோனியா அகர்வால் ஆகிய இருவரையும் தனுஷ் திருமணம் செய்து கொள்வார்.

புதுப்பேட்டை 2 (Pudhupettai 2)

இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து இப்படத்தின் 2 ஆம் பாகமும் உருவாகும் என்று தெரிவிக்கப்பட்டது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு இயக்குநர் செல்வராகவன் தனது 43 ஆவது பிறந்தநாளை கொண்டாடினார்.

இதையடுத்து, தனியார் கல்லூரி ஒன்றில் நடந்த விழாவில் அவர் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் கூறுகையில்,

என்ஜிகே படத்தைத் தொடர்ந்து நான் தற்போது தனுஷ் உடன் புதுப்பேட்டை 2 (Pudhupettai 2) படத்திற்காக இணைந்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

தனுஷ் – செல்வராகவன் இணையும் 5 ஆவது படம் புதுப்பேட்டை 2.

இதற்கு முன்னதாக இந்த கூட்டணியில், துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை மற்றும் மயக்கம் என்ன ஆகிய படங்கள் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் புதுப்பேட்டை மட்டும் கேங்க்ஸ்டர் படம். மற்ற படங்கள் அனைத்தும் காதலை மையப்படுத்தி வெளியான படங்கள்.

புதுப்பேட்டை படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். புதுப்பேட்டை 2 படத்திற்கு சியன் ரோல்டன் இசையமைக்க இருப்பதாக கூறப்படுகிறது.

புதுப்பேட்டை 2 படத்தின் மூலம் கொக்கிகுமாராக தனுஷ் தனது அரசியல் பயணத்தை தொடங்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷ் Dhanush நடிப்பில் கர்ணன், ஜகமே தந்திரம் மற்றும் D43 ஆகிய படங்கள் உருவாகி வருகிறது.

SOURCER SIVAKUMAR
Previous articleடிவிட்டரில் அஜித்: கையெழுத்து கடிதம் வெளியானது
Next articleசனி தோஷம் நீக்கும் சனி மகா பிரதோஷம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here