Home சினிமா கோலிவுட் முன்னாள் கணவருக்கு நன்றி சொன்ன சோனியா அகர்வால்!

முன்னாள் கணவருக்கு நன்றி சொன்ன சோனியா அகர்வால்!

0
361
Sonia Agarwal

முன்னாள் கணவருக்கு நன்றி சொன்ன சோனியா அகர்வால்! தனது முன்னாள் கணவர் செல்வராகவனுக்கு நடிகை சோனியா அகர்வால் நன்றி தெரிவித்துள்ளார்.

இயக்குநர் செல்வராகவனுக்கு நடிகை சோனியா அகர்வால் நன்றி தெரிவித்துள்ளார்.

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வந்த காதல் கொண்டேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அவதாரம் எடுத்தவர் நடிகை சோனியா அகர்வால்.

கடந்த 2003 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் தேதி வெளியான இந்தப் படம் திரைக்கு வந்து 17 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது.

காதல் கொண்டேன் படத்தைத் தொடர்ந்து 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை ஆகிய படங்களில் இயக்குநர் செல்வராகன் உடன் இணைந்து பணியாற்றினார்.

இதன் மூலம் இருவரும் காதலித்து கடந்த 2006 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்திற்குப் பிறகு சினிமாவில் நடிக்கவில்லை. பின்னர், செல்வராகவன் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2010 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார். இதையடுத்து, மீண்டும் சினிமாவில் ரீஎண்ட்ரி ஆனார்.

வானம், சதுரங்கம், பாலக்காட்டு மாதவன், தடம், தனிமை, அயோக்யா, குயீன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது, வன்முறை, ரெட் என்ற தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது முன்னாள் கணவரும் இயக்குநருமான செல்வராகவனுக்கு நன்றி தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: காதல் கொண்டேன் தமிழ் சினிமாவில் பார்த்திராத ஒரு ஒப்பற்ற படம்.

இந்தப் படத்தில் பணியாற்றிய அனைத்து நடிகர்கள், நடிகைகள் அனைவருக்கும் நன்றி. இயக்குநர் செல்வராகவன், கஸ்தூரி ராஜா, தனுஷ் ஆகியோருக்கும், இறைவனுக்கும் நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here