Soori; ஏழை, எளிய மக்களுக்காக அள்ளி அள்ளி கொடுத்த சூரி! ஃபெப்சி தொழிலாளர்களுக்கு அரிசி மூட்டைகளை கொடுத்ததோடு, நடிகர் சூரி, தனது சொந்த செலவில் 100 ஏழை, எளிய மக்களுக்கு இன்று உணவளித்துள்ளார்.
100 ஏழை, எளிய மக்களுக்கு தனது சொந்த செலவில் சூரி உணவளித்துள்ளார்.
ஃபெப்சி தொழிலாளர்களுக்கு 25 கிலோ கொண்ட 100 அரிசி மூட்டைகளை நடிகர் சூரி தானமாக கொடுத்துள்ளார்.
நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மட்டும் இதுவரை 166 பேர் கொரோவால் பலியாகியுள்ளனர்.
கொரோனா பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த ஊரடங்கு முடிவதற்கு இன்னும் 5 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா வைரஸ் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டன. சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், ஃபெப்சி தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு உதவும் வகையில் பிரபலங்கள் பலரும் நிதியுதவியாகவும், அரிசி மூட்டைகளை தானமாகவும் கொடுத்து வருகின்றனர்.
ரஜினிகாந்த், அஜித், சூர்யா குடும்பத்தினர், சிவகார்த்திகேயன், பிரகாஷ் ராஜ், பார்த்திபன், ஜெயம் ரவி, ராகவா லாரன்ஸ், யோகி பாபு என்று பலரும் தங்களால் முடிந்த உதவியை செய்துள்ளனர்.
அந்த வகையில், தற்போது இவர்களது பட்டியலில் காமெடி நடிகர் சூரியும் இணைந்துள்ளார். ஆம், அவர், ஃபெப்சி தொழிலாளர்களுக்கு 25 கிலோ கொண்ட 100 அரிசி மூட்டைகளையும், துணை நடிகர்கள் சங்கத்திற்கு 20 அரிசி மூட்டைகளையும் தானமாக வழங்கியுள்ளார்.
மேலும், தனது சொந்த செலவில் 100 ஏழை எளிய மக்களுக்கு இன்று உணவளித்துள்ளார். இதற்கு முன்னதாக நடிகர் சங்கத்திற்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.1 லட்சம் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
லட்சம், கோடிக்கணக்கில் நிதியுதவி அளித்துவிடலாம். ஆனால், ஒரு ஏழைக்கு வயிறார சாப்பாடு போடுவது யாருக்கும் வராது.
அந்த வகையில், 100 எளிய மக்களுக்கு உணவளித்து தான் ஒரு மனிதாபிமானம் உள்ளவன் என்பதை சூரி அடிக்கடி நிரூபித்து வருகிறார். சூரிக்கு பலரும் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் தெரிவித்து வருகின்றனர்.