Sunny Leone; கொரோனாவில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க அமெரிக்கா சென்ற சன்னி லியோன்! கொரோனா வைரஸிலிருந்து குழந்தைகளை பாதுகாப்பதற்கு நடிகை சன்னி லியோன் அமெரிக்காவிற்கு சென்றுள்ளார்.
குழந்தைகளை பாதுகாக்கவே நடிகை சன்னி லியோன் அமெரிக்கா சென்றுள்ளார்.
ஆபாச பட நடிகை சன்னி லியோன். தமிழில், வந்த வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடியிருப்பார். தற்போது, தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் உருவாகி வரும் வீரமாதேவி என்ற படத்தில் நடித்து வருகிறார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார்.
அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்ததால் இந்தியாவிலேயே குடியேறினார். அவர் இந்தியாவில் தங்குவதற்கு எதிர்ப்புகள் கிளம்பியது. எனினும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் இந்தியாவிலேயே தங்கினார்.
இந்த நிலையில், நாடு முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக, தனது குழந்தைகளை பாதுகாக்கும் பொருட்டு கணவர் டேனியல் வெபர் உடன் அமெரிக்கா சென்றுவிட்டார்.
தனது 3 குழந்தைகள் மற்றும் கணவருடன் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் உள்ள தோட்டத்துடன் கூடிய தனது வீட்டில் குடியேறியுள்ளார்.
மற்ற நாடுகளை விட அமெரிக்காவில் தான் கொரோனா பாதிப்பு அதிகம் என்று கூறப்படும் நிலையில், சன்னி லியோன் அமெரிக்காவில் குடியேறியுள்ளார்.
எனினும், அவர் குடியிருக்கும் வீடு கொரோனா பாதிப்புகள் இல்லாத பகுதியில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து சன்னி லியோன் கூறுகையில், லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள எனது தோட்டத்தில் நான் குழந்தைகளுடன் பாதுகாப்பாக இருக்கிறேன்.
கண்ணுக்கு தெரியாத கொரோனா வைரஸிலிருந்து குழந்தைகளை பாதுகாக்க, இதுதான் சரியான இடம் என்று கூறியுள்ளார்.
தனது 3 குழந்தைகளுடன் வீட்டு தோட்டத்தில் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சன்னி லியோன் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.