Home சினிமா கோலிவுட் Super deluxe : ராசுகுட்டி எனும் மழலை!

Super deluxe : ராசுகுட்டி எனும் மழலை!

350
0
ராசுகுட்டி

Super deluxe: சூப்பர் டீலக்ஸ் ராசுகுட்டி எனும் மழலையின் அபூர்வம் !

சூப்பர் டீலக்ஸ் படத்தில் விஜய்சேதுபதி, ஃபகத் ஃபாசில், சமந்தா, மிஷ்கின், ரம்யாகிருஷ்ணன், காயத்ரி, மிர்நாளினு பெரிய நடிகர் பட்டாளமே இருந்தாலும் ‘ராசுகுட்டி’ எனும் அஷ்வந்த் நம்ம அனைவரையும் அவ்வளவு அழகா மிக மிக எளிதாக கவர்ந்தார் என்பது மிகப்பெரும் உண்மை.

நடிப்பின் மூலம் சொன்னான், இராசுகுட்டி

வெறுமனே குழந்தைகளை எப்படி பார்த்தாலும் பிடிக்கும் என்பது உண்மைதான். ஆனாலும் சூப்பர் டீலக்ஸில் இராசுகுட்டியின் நடிப்பென்பது அசுரத்தனம் கலந்த சுட்டித்தனம்.

பலவருடமாக காணாத அப்பாவை காண ஏங்கியிருக்கும் சிறுவனாக தொடங்கும் இராசுகுட்டி கதாபாத்திரம். “ஏய் ! அப்பா வந்துட்டாங்க அப்பா வந்துட்டாங்க , ஜாலி!” னு சொல்லிக்கொண்டே இராசுகுட்டி ஓடி வந்து “டிகு டிகு குடு குடு டிஷ்” னு சொல்லி கதவ திறப்பாரு,

ஆனா வெளிய பார்த்தா அப்பா இருக்கமாட்டாரு அந்த இடத்துல அப்படியே body language மாறும் குறிப்பா கண்பார்வை அப்படியே சுருங்கி வேறுபடும். அப்பவே நம் அனைவரையும் கவணிக்க வச்சிட்டாரு இராசுகுட்டி எனும் அஷ்வந்த் .

இராசுகுட்டி கதவினருகில் உள்ள சுவரில் welcome என்ற பலகையை

பொருத்தும் போதும், ஒவ்வொரு முறையும் அப்பா வந்துட்டாரு ஜாலி என்று சொல்லும் போதும் அவ்வளவு சுருசுருப்புடன் முகபாவணைகளை அழகாக கையாண்டிருப்பார் அஷ்வந்த்.

மேலும் ஒவ்வொரு முறையும் கதவை திறந்து அப்பா இல்லை என்று இராசுகுட்டி ஏமாற்றத்துடன் திரும்பி போகும்போது நாம் மழையை

எதிர்பார்த்து கொண்டிருக்கும்போது  வெறும கருமேகத்தை பார்த்து பார்த்து ஏமாற்றம் அடைவோமே அந்த உணர்ச்சியை நமக்குள் உணர்வோம்.

அந்த உணர்வை நமக்குள் விதைக்க ஒரு நடிகனின் நடிப்பு முக்கியமானது அதை சிறப்பாகவே செய்திருப்பார் அஷ்வந்த். அதே சமயம் நிறைய

சிறு சிறு வசனங்களாலும் உடலசைவுகளாலும சிரிப்புடன் நம்மிடம் கேள்விகளை விதைப்பார்.

நிகழ்வின் வழியே இராசுகுட்டி

தன் அப்பா வந்ததும் அனைவரும் அவர் பெண்ணாக மாறியதை கண்டு வியந்து கொண்டிருக்க இராசுகுட்டி தன் அம்மாவிடம் வந்து ‘அப்பா schoolக்கு வர பூபோட்ட புடவை எடுத்து தர சொல்லுது’ னு சொல்லிட்டு போவான் அதுதான் இராசுகுட்டி எனும் மழலை. திரைப்படத்தில் இராசுகுட்டியின் schoolக்கு செல்கிற வழியில்

இராசுகுட்டிக்கும் அவன் அப்பாவுக்கும் இடையில் ஒரு உரையாடல் நடைபெறும். இராசுகுட்டி கேட்கும் ஒவ்வொரு கேள்வியும் அதற்கேற்ற அவன் குரல் வேறுபாடும் நம்மை கவர்வதோடு நிறுத்தாமல்  அதிலுள்ள நியாயத்தை நமக்கு புரியவைக்கும், நம்மையும் கேள்விகேட்கும்.

இராசுகுட்டி தன் நண்பர்களிடம் தன் அப்பாவை காட்டும்போது “என்னடா உங்க அப்பா புடவை கட்டிருக்காரு” னு நண்பர்கள் கேட்க அதற்கு இராசுகுட்டி “அதுதான்டா அவர் ஸ்டைல்”னு சொல்லுவான்.

இராசுகுட்டிக்கு மற்ற அப்பாக்களை போல் நம் அப்பாவும் இருக்க வேண்டும்என்ற எந்த கட்டாயமும் இல்லை.

அவனை பொறுத்தவரையில் எப்படியாகினும் அவர் அப்பா அதை அவன் அன்புடன் ஏற்றும்கொள்கிறான் கட்டாயத்தின் பெயரிலெல்லாம் அவன் ஏற்றுக்கொள்ளவில்லை. நாமும் அதை ஏற்றுகொள்ளுமளவிற்கு இராசுகுட்டி கதாபாத்திரம் இருக்கும்.

யோசிக்கவைத்தான் இராசுகுட்டி!

இராசுகுட்டியை விட்டு பழையபடி ஊருக்கு போகலாம் என்றிருப்பார் அவனின் அப்பா, அப்போது இராசுகுட்டி அவன் அப்பாவிடம் “உன்ன எல்லாரும் கிண்டல் பண்றாங்க ஆனா அம்மாவும் நானும் எதாவது சொன்னோமா”

என்ற கேள்வியும், “நீ ஆம்பளையா இரு, பொம்பளையா இரு ஆனா கூடவே இருந்து தொலையேன்” னு இராசுகுட்டி சொல்ற வசனமும்  அவன் அப்பாவை மட்டுமல்ல நம்மையும் உலுக்கும், கேள்விகேட்கும், யோசிக்கவைக்கும் .

ரன்வீர் சிங் இராசுகுட்டியை பற்றி;

சென்ற வருடம் நடைபெற்ற பிரபல interview ஒன்றில்  பாலிவுட் ஸ்டார் ரன்வீர் சிங் அவர்கள் இராசுக்குட்டியை பற்றி

 “எனக்கு நண்பர் ஒருவர் call செய்து சூப்பர் டீலக்ஸ் படத்தை பார்க்க சொன்னார், அதுவும் அப்படத்தில் பத்து வயதான குழந்தை  ஒருவன் நடித்துள்ளதாகவும், அவன் உங்களின் வாழ்வை யோசிக்க செய்வான் என்றெல்லாம் சொன்னார்” என்றும், “பின்பு நான் படம்பார்த்தேன்.. raskutty, he is phenomenal, he is absolute phenomenal, he is pure magic ” என்றெல்லாம் கூறினார். மேலும் அங்கிருந்தவர்களிடமும்
 “guys ..Who ever hasn’t seened it, must watched it for chemistry between  vijaysethupathy and that child ..It was so special” என்றும் கூறினார்.

அந்தளவுக்கு இராசுகுட்டியாக அஷ்வந்தை மாற்றி நடிக்க வைத்துள்ளார் இயக்குநர் தியாகராஜா குமாரராஜா. அதற்கு அஷ்வந்தும் முழுமையாக தன்னை ஒப்படைத்திருக்கிறார்.

இப்படம் ரீலிஸ் ஆன வாரங்களில் சமுகவலைதளங்களில் ஒரு கருத்து தீவிரமாக பரவியது  ‘இராசுகுட்டி மாதிரி இருங்கள், அவன் உங்கள் பாலினத்தை பற்றி எதுவுமே கண்டுகொள்வதில்லை‘ என்பதுதான் அது.

“அவர்கள் பாலை அவர்கள் சொல்லட்டும் அதில் நாம் சர்க்கரை மட்டும் கலப்போம்” என்ற பாடலாசிரியர் விவேக் கவிதையின் சாயலில்

இராசுகுட்டி தெரிவான். BE LIKE RASUKUTTY !
Previous articleபாகிஸ்தானை வச்சி செஞ்ச சேவாக் 309
Next articleஆகா ! வந்துவிட்டது jio புதிய ப்ளான் : தினமும் 2 ஜிபி இலவசம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here