Soorarai Pottru Release; என்னது ஆகஸ்டில் சூரரைப் போற்று படமா? யார் சொன்னது? சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள சூரரைப் போற்று படம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாக இருப்பதாக முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
சூரரைப் போற்று படம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாக இருப்பதாக முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் சூரரைப் போற்று. ஏர் டெக்கான் நிறுவன ஜிஆர் கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி சூரரைப் போற்று படம் உருவாக்கப்பட்டுள்ளது.
சூரரைப் போற்று படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார்.
மேலும், கருணாஸ், மோகன் பாபு, ஊர்வசி, ஜாக்கி ஷெராஃப், காளி வெங்கட் ஆகியோரும் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்தப் படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமே தயாரித்துள்ளது.
வரும் மே மாதம் திரைக்கு வரயிருந்த இப்படத்தின் ரிலீஸ் தேதி கொரோனாவால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி வரும் ஆகஸ்ட் மாதம் சுதந்திர தினத்தை முன்னிட்டு படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக் தகவல் வெளியாகியுள்ளது.
சூர்யாவின் சினிமா வாழ்க்கையில், சூரரைப் போற்று சிறந்த படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு சூரரைப் போற்று மேக்கிங் வீடியோ வெளியானது. நேற்று இப்படத்தில் இடம்பெற்றுள்ள வெய்யோன் சில்லி என்ற பாடல் யூடியூப்பில் 10 மில்லியன் வியூஸ் பெற்று சாதனை படைத்துள்ளது என்ப்து குறிப்பிடத்தக்கது.
சூரரைப் போற்று படத்தைத் தொடர்ந்து, சூர்யா இயக்குநர் ஹரி இயக்கத்தில் அருவா என்ற படத்தில் நடிக்க இருக்கிறார்.