Home சினிமா கோலிவுட் தனித்தனி குரலுக்கு சொந்தக்காரர் பத்மஸ்ரீ டி எம் சௌந்தரராஜன்!

தனித்தனி குரலுக்கு சொந்தக்காரர் பத்மஸ்ரீ டி எம் சௌந்தரராஜன்!

476
0
T M Soundararajan Birthday

T. M. Soundararajan (TMS); தனித்தனி குரலில் பாடும் வல்லமை படைத்தவர் டி எம் சௌந்தரராஜன்! எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி என்று எந்த நடிகராக இருந்தாலும் அவர்களுக்கு ஏற்றவாறு தனித்தனி குரலில் பாடும் வல்லமை படைத்தவர் பாடகர் டிஎம் சௌந்தரராஜன்.

செம்மொழியான தமிழ்மொழியாம் என்ற பாடலே டி எம் சௌந்தரராஜன் கடைசியாக பாடிய பாடல்.

தோகுலுவ மீனாட்சி ஐயங்கார் சௌந்தரராஜன் என்ற டி எம் சௌந்தரராஜனின் 98 ஆவது பிறந்தநாள் இன்று.

டி எம் சௌந்தரராஜன் (T. M. Soundararajan)

கடந்த 1922 ஆம் ஆண்டு மார்ச் 24 ஆம் தேதி மதுரையில் பிறந்தவர் டிஎம் சௌந்தரராஜன். இவரது பெற்றோர் மீனாட்சி ஐயங்கார். இவருக்கு 2ஆவது மகனாகப் பிறந்தவர் தான் டி எம் சௌந்தரராஜன்.

டி எம் சௌந்தரராஜன் கடந்த 1946 ஆம் ஆண்டு சுமுத்திரா என்பவரைத் திருமணம் செய்தார்.

டி எம் சௌந்தரராஜன் இசைப்பயிற்சி

பூச்சி ஸ்ரீனிவாச ஐயங்காரின் மருமகனான காரைக்குடி ராஜாமணி ஐயங்காரிடம் முறையாக இசைப் பயிற்சி பெற்று திரையுலகில் நுழைந்தார்.

பல ஆண்டுகளாக கச்சேரி செய்து வந்துள்ளார். அப்போது, சுந்தரராவ் நட்கர்னி தனது கிருஷ்ண விஜயம் படத்தில் “ராதே நீ என்னை விட்டுப் போகாதேடி” என்ற பாடலைப் பாடுவதற்கு ஒப்பந்தம் செய்தார்.

இதைத் தொடர்ந்து, மந்திரி குமாரி, தேவகி, சர்வாதிகாரி போன்ற படங்களில் பாடுவதற்கு வாய்ப்பு கிடைத்தது. தேவகி படத்தில் அவர் பாடி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனித்தனி குரலுக்கு சொந்தக்காரர்

டி எம் சௌந்தரராஜன், எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி, ரவிச்சந்திரன், ஜெய்சங்கர், முத்துராமன், நாகேஷ் உள்பட முன்னணி நடிகர்கள் ஒவ்வொருவருக்கும் அவரவர் குரலுக்கு ஏற்றவாறு தனித்தனி குரலில் பாடக்கூடிய வல்லமை பெற்றவர் இவரே என்று தமிழக மக்கள் புகழ்ந்து வருகின்றனர்.

டி எம் சௌந்தரராஜன் பாடல்கள் (TMS Songs)

வீரம், காதல், சோகம், துள்ளல், தத்துவம், நையாண்டி மற்றும் கிராமிய மணம் கமழும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களையும், 2500க்கும் மேற்பட்ட பக்திப் பாடல்களையும் பாடியுள்ளார்.

இவ்வளவு ஏன், ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசன் ஆகியோர் நடிப்பில் வந்த படங்களுக்கும் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பட்டினத்தார்

கடந்த 1962 ஆம் ஆண்டு திரைக்கு வந்த பட்டினத்தார் படத்தில் பட்டினத்தாராக நடித்தார். இதே போன்று அருணகிரிநாதர் படத்திலும் நடித்துள்ளார். அந்தப் படத்தில், முருகக் கடவுள் மீது இவர் பாடிய “முத்தைத் திருபத்தித் திருநகை”எனும் பாடல் இன்றும் பலரது மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளது.

பத்மஸ்ரீ விருது

கடந்த 2003 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்றார். டி எம் சௌந்தரராஜன் 40 ஆண்டுகள் வரை தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு அடையாளத்திஅ வகுத்துக் கொண்டார். தனது பாடல்களையும் இன்றும் பேசும் வகையில் உருவாக்கி புதிய சாதனையை படைத்திருக்கிறார்.

பத்மஸ்ரீ விருது மட்டுமல்ல கலைமாமணி விருதும் பெற்றுள்ளார்.

செம்மொழியான தமிழ்மொழியாம்

கடந்த 2010 ஆம் ஆண்டு கோவையில் நடந்த உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டிற்காக உருவாக்கப்பட்ட செம்மொழியான தமிழ்மொழியாம் என்ர பாடலே இவர் கடைசியாக பாடிய பாடல்.

டி எம் சௌந்தரராஜன் மறைவு

கடந்த 2013 ஆம் ஆண்டு மே 25 ஆம் தேதி இதயக் கோளாறு காரணமாக சென்னையில் பிற்பகல 3.50 மணிக்கு காலமானார். அப்போது, அவருக்கு வயது 91.

டி எம் சௌந்தரராஜன் பாடல்கள்:

வசந்த முல்லை ( சாரங்கதாரா 1958 )

ஒன்றா இரண்டா ( செல்வம் 1966 )

மணப்பாறை மாடுகட்டி ( மக்களை பெற்ற மகராசி 1957 )

யாரடி நீ மோகினி ( உத்தம புத்திரன் 1958 )

முத்தைத்தரு ( அருணகிரிநாதர் 1964 )

பாட்டும் நானே ( திருவிளையாடல் 1965 )

சிந்தனை செய் மனமே ( அம்பிகாபதி 1957 )

முத்துக் குளிக்க வாரிங்களா ( அனுபவி ராஜா அனுபவி )

வாழ நினைத்தால் ( பலே பாண்டியா )

ஒளிமயமான எதிர்காலம் ( பச்சை விளக்கு )

பேசுவது கிளியா ( பணத்தோட்டம் )

எத்தனை காலம்தான் ( மலைக்கள்ளன் )

காசேதான் கடவுளப்பா ( சக்கரம் )

தூங்கதே தம்பி ( நாடோடிமன்னன் )

ஒரு பக்கம் பார்க்கிறா ( மாட்டுக்கார வேலன் )

ஓடி ஓடி உழைக்கணும் ( நல்ல நேரம் )

யாருக்காக ( வசந்த மாளிகை )

நான் ஆணையிட்டால் ( எங்க வீட்டுப் பிள்ளை )

ஏன் பிறந்தாய் மகனே ( பாகப்பிரிவினை )

உலகம் பிறந்தது எனக்காக ( பாசம் )

அதோ அந்த பறவை போல ( ஆயிரத்தில் ஒருவன் )

அன்று வந்ததும் அதே நிலா ( பெரிய இடத்துப் பெண் )

ஒரு ராஜா ராணியிடம் ( சிவந்த மண் )

இப்படி அடிக்கிக் கொண்டே போகலாம். அவர் பாடிய பாடல்கள் ஏராளம்.

இந்த நிலையில், இன்று அவரது 98 ஆவது பிறந்தநாள். இதன் காரணமாக இன்று அவரது நினைவாக அவரது ரசிகர்கள் அவர் பாடிய பாடல்களை கேட்டு ரசித்து வருகின்றனர்.

SOURCER SIVAKUMAR
Previous articleசினிமாவில் சாதிக்க துடிக்கும் குண்டாத்தி ரம்யா நம்பீசன்!
Next articleHantavirus Symptoms; ஹண்டா வைரஸ் அறிகுறிகள் மற்றும் பரவும் விதம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here