Taapsee EB Bill; டாப்ஸி மின் கட்டணம்: மும்பையில், மின் கட்டண கொள்ளை! மும்பையில், அளவுக்கு அதிகமாக மின் கட்டவணம் வசூலிப்பதாக பிரபலங்கள் பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.
மும்பையில், மின் கட்டணம் அளவிடுவதில் பல்வேறு குளறுபடிகள் உள்ளதாகவும், அளவுக்கு அதிகமாக வசூல் செய்வதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.
தமிழில் தனுஷ் நடித்த ஆடுகளம் படம் மூலம் அறிமுகமாகி அனைவரது இதயங்களையும் கொள்ளை கொண்டவர் நடிகை டாப்ஸி. வெள்ளாவி வைத்து வெளுத்தாங்களா என்று பாடல் பாடும் அளவிற்கு கொள்ளையழகு கொண்டுள்ளார்.
ஆடுகளம் படத்தைத் தொடர்ந்து வந்தான் வென்றான், ஆரம்பம், கதை திரைக்கதை வசனம் இயக்கம், காஞ்சனா 2, வை ராஜா வை, கேம் ஓவர் என்று பல படங்களில் நடித்துள்ளார். தற்போது, ஜன கண மண என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், மும்பையில், அளவுக்கு அதிகமாக வசூலிக்கப்படும் மின் கட்டணம் குறித்து பிரபலங்கள் பலரும் புகார் அளித்து வருகின்றனர். அந்த வகையில், நடிகை டாப்ஸி மின் கட்டணம் குறித்து குற்றம்சாட்டியுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் போடப்பட்ட முழு ஊரடங்கு காரணமாக மின்சார கட்டணத்தை கணக்கிடுவதில் சிக்கல் எழுந்தது. இதனால், தற்போது 3 முதல் 4 மாதங்களுக்கும் சேர்த்து மின் கட்டணம் அளவிடப்பட்டு வருகிறது. ஆனால், கட்டணம் அளவிடுவதில் பல்வேறு குளறுபடிகள் உள்ளதாகவும், மிகவும் அதிகப்படியான கட்டணம் போடப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னதாக நடிகை கார்த்திகா நாயர் தனது வீட்டிற்கு ரூ.1 லட்சம் வரையில், மின் கட்டணம் வந்துள்ளதாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.