Taapsee Pannu Reduce Salary; டாப்ஸி அதிரடி அறிவிப்பு: சினிமா தயாரிப்பாளர்களுக்காக டாப்ஸி எடுத்த முடிவு! கொரோனா லாக்டவுன் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள தயாரிப்பாளர்களுக்கு உதவும் வகையில் நடிகை டாப்ஸி தனது சம்பளத்தை குறைத்துக் கொள்வதாக அறிவித்துள்ளார்.
நடிகை டாப்ஸி தனது சம்பளத்தை குறைத்துக் கொள்வதாக அறிவித்துள்ளார்.
கொரோனா லாக்டவுன் காரணமாக 2 மாதங்களுக்கும் மேலாக சினிமா படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டு திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன.
இதன் விளைவாக பட தயாரிப்பாளர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள், திரைப்பட தொழிலாளர்கள் என்று பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தயாரிப்பாளர்களின் நஷ்டத்தை ஈடு செய்யும் வகையில், நடிகர், நடிகைகள் தங்களது சம்பளத்தை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து, நடிகர் விஜய் ஆண்டனி தான் நடித்து வரும் தமிழரசன், அக்னி சிறகுகள், காக்கி ஆகிய 3 படங்களின் சம்பளத்தில் இருந்து 25 சதவீதம் குறைத்துக் கொள்வதாக அறிவித்தார்.
இவரைத் தொடர்ந்து நடிகர் ஹரிஷ் கல்யாண், நாசர், இயக்குநர் ஹரி, அருள் தாஸ், உதயா, ஆர்த்தி, மகத் ஆகியோரும் தங்களது சம்பளத்தை குறைத்துள்ளனர்.
இந்த நிலையில், தமிழில் ஆடுகளம் படம் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகை டாப்ஸியும், தனது சம்பளத்தை குறைத்துக் கொள்வதாக அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள தயாரிப்பாளர்களுக்கு உதவும் வகையில், தனது சம்பளத்தை குறைத்துக் கொள்ள தயாராக இருக்கிறேன்.
சினிமா துறை மீண்டும் சகஜ நிலை திரும்புவதற்காக சம்பளம் குறைக்கப்படுவதை தவிர்க்க முடியாது என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆடுகளம் படத்தைத் தொடர்ந்து, வந்தான் வென்றான், ஆரம்பம், காஞ்சனா 2, வை ராஜா வை, கேம் ஓவர் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.