Home சினிமா கோலிவுட் Takkar: டக்கர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Takkar: டக்கர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

377
0

Takkar டக்கர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள டக்கர் Takkar Release Date படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சித்தார்த். மணி ரத்னம் இயக்கத்தில் வந்த கன்னத்தில் முத்தமிட்டாள் படத்தின் மூலம் சினிமாவிற்கு வந்தார்.

எனினும், பாய்ஸ் படத்தின் மூலமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றார்.

இப்படத்தைத் தொடர்ந்து ஆய்த எழுத்து, 180, காதலில் சொதப்புவது எப்படி, காவிய தலைவன், எனக்குள் ஒருவன், அரண்மனை 2, ஜில் ஜங் ஜக், அவள் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

கடந்தாண்டு வெளிவந்த சிவப்பு மஞ்சள் பச்சை, அருவம் ஆகிய படங்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

தற்போது, சைதான் கா பச்சா, டக்கர், இந்தியன் 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். எனினும், கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கத்தில் உருவாகி வரும் சைதான் கா பச்சா தாமதமாகியுள்ளது.

இப்படத்தில் சித்தார்த் உடன் இணைந்து ராஷி கண்ணா, கருணாகரன், யோகி பாபு, வம்சி கிருஷ்ணா, கஞ்சா கருப்பு, தம்பி ராமையா ஆகியோர் நடித்து வருகின்றனர்.

இப்படத்தைத் தொடர்ந்து டக்கர் படத்தில் நடித்து வருகிறார். இதில் இவருடன் இணைந்து யோகி பாபு, திவ்யன்ஷா கவுசிக், விக்னேஷ்காந்த் ஆகியோரும் நடித்துள்ளனர்.

முதல் முறையாக யோகி பாபு இந்தப் படத்தில் அப்பா – மகன் என்று இரு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கப்பல் படத்தை இயக்கிய கார்த்திக் ஜி கிரிஷ் டக்கர் படத்தை இயக்கியுள்ளார். நிவாஸ் பிரசன்னா படத்திற்கு இசையமைத்துள்ளார்.

டக்கர் ரிலீஸ் தேதி (Takkar Release Date)

இந்த நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

அதன்படி வரும் ஏப்ரல், 17 ஆம் தேதி தமிழ் புத்தாண்டைத் தொடர்ந்து டக்கர் படம் வெளியாகிறது.

இப்படத்தைத் தொடர்ந்து பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் கமல் ஹாசன் உடன் இணைந்து நடிக்கிறார்.

மேலும், இந்தப் படத்தில் காஜல் அகர்வால், பாபி சிம்ஹா, மனோபாலா, தம்பி ராமையா, விவேக், டெல்லி கணேஷ், லிவிங்ஸ்டன், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி ஆகியோர் நடித்து வருகின்றனர்.

SOURCER SIVAKUMAR
Previous articleபொன் மாணிக்கவேல் ரிலீஸ் ஒத்திவைப்பு!
Next articleகிங்ஸ் லெவன் பஞ்சாப்க்கு அதிசயம் நடக்குமா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here