Home சினிமா கோலிவுட் சின்னத்திரை படப்பிடிப்புக்கு அனுமதி!

சின்னத்திரை படப்பிடிப்புக்கு அனுமதி!

338
0
TV Serial Shooting

சின்னத்திரை படப்பிடிப்புக்கு தமிழக அரசு அனுமதி! கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சின்னத்திரை படப்பிடிப்புக்கு நிபந்தனைகளுடன் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

சின்னத்திரை படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நாட்டையே உலுக்கிய கொரோனா காரணமாக அனைத்து படப்பிடிப்புகளும் நிறுத்தி வைக்கப்பட்டது. திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன.

இந்த நிலையில், அண்மையில், டப்பிங், எடிட்டிங் உள்பட படப்பிடிப்புக்கு பிந்தைய பணிகளுக்கு நிபந்தனைகளுடன் அரசு அனுமதி அளித்தது.

இதைத் தொடர்ந்து தற்போது சின்னத்திரை படப்பிடிப்புக்கும் நிபந்தனைகளுடன் அரசு அனுமதி அளித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

  • சென்னையில் படப்பிடிப்பு நடத்துவதற்கு மாநகராட்சி ஆணையரிடமும், பிற மாவட்டங்களில் படப்பிடிப்பு நடத்துவதற்கு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சி தலைவரிடமும் முன் அனுமதி பெற வேண்டும்.
  • மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் அனைத்து கட்டுப்பாடுகளை தவறாமல் பின்பற்ற வேண்டும்.
  • அதிகபட்சமாக நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்கள் உள்பட 20 பேருக்கு மிகாமல் படப்பிடிப்பு நடத்தலாம்.
  • படப்பிடிப்பு நடக்கும் அரங்கை அல்லது வீட்டினை படப்பிடிப்புக்கு முன்னும், பின்னும் கிருமி நாசினியால் சுத்தம் செய்ய வேண்டும்.
  • படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் நடிகர், நடிகைகள் தவிர மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.
  • நடிகர், நடிகைகளும் படப்பிடிப்பு இடைவெளியின் போது தவறாமல் முகக்கவசம் அணிய வேண்டும்.
  • படப்பிடிப்பு குழுவினர் அவ்வப்போது சோப் அல்லது கிருமி நாசினி கொண்டு தங்களது கைகளை சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
  • படப்பிடிப்பு நடத்தப்படும் வளாகத்திற்குள் வரும் வாகனங்கள் மற்றும் போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட வேண்டும்.
  • அதே போன்று படப்பிடிப்புக்கு பயன்படுத்தப்படும் கேமரா மற்றும் கிரேன் உள்ளிட்ட அனைத்து சாதங்களையும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
  • சளி, இருமல், காய்ச்சல், மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் இருக்கும் கலைஞர்களையோ அல்லது தொழில்நுட்ப பணியாளர்களையோ படப்பிடிப்பு வளாகத்திற்குள் அனுமதிக்கக் கூடாது.
  • இத்தகைய அறிகுறிகள் உள்ளவர்களை உடனடியாக மருத்துவ பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும்.
  • பார்வையாளர்களை படப்பிடிப்பு வளாகத்திற்குள் அனுமதிக்கக் கூடாது.
  • சுற்றுச்சுவர் உள்ள வீடுகளுக்கு உள்ளே அலல்து அரங்கிற்குள் மட்டும் படப்பிடிப்பு நடத்த வேண்டும். தடை செய்யப்பட்ட பகுதிகளுக்கு இது பொருந்தாது.
  • பொது இடங்களில் படப்பிடிப்பு நடத்தக் கூடாது. எனினும், ஊரகப் பகுதிகளில் (தடை செய்யப்பட்ட பகுதிகளைத் தவிர) பொது இடங்களில் படப்பிடிப்பு நடத்த தடை ஏதும் இல்லை.

படப்பிடிப்புக்கு வருகை தரும் அனைவரும் மேற்கண்ட நிபந்தனைகளை தவறாமல் கடைப்பிடிப்பதை சின்னத்திரை தயாரிப்பாளர்கள் உறுதி செய்துகொண்டு படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்கப்படுகிறது”.

இவ்வாறு தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Small Screen Shooting

SOURCER SIVAKUMAR
Previous articleஇப்போதான் காதலுக்கு ஓகே சொன்னாங்க: அதுக்குள்ள நிச்சயமே முடிஞ்சிருச்சு!
Next articleகௌதம் மேனனின் குறும்படம் வெளியீடு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here