Home சினிமா கோலிவுட் டிஜிட்டல் பிளாட்பார்மில் பொன்மகள் வந்தாள்: தியேட்டர் உரிமையாளர்கள் அதிரடி முடிவு!

டிஜிட்டல் பிளாட்பார்மில் பொன்மகள் வந்தாள்: தியேட்டர் உரிமையாளர்கள் அதிரடி முடிவு!

1406
1
Ponmagal Vandhal

Ponmagal Vandhal; டிஜிட்டல் பிளாட்பார்மில் பொன்மகள் வந்தாள்: தியேட்டர் உரிமையாளர்கள் அதிரடி முடிவு! சூர்யா தயாரிப்பில் உருவாகியுள்ள பொன்மகள் வந்தாள் படம் டிஜிட்டல் பிளாட்பார்மில் வெளியாக இருப்பதாக இன்று செய்திகள் வெளியான நிலையில் தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தினர் அதிரடி முடிவு எடுத்துள்ளனர்.

பொன்மகள் வந்தாள் படம் திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக தகவல் வந்த நிலையில், தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தினர் அதிரடி முடிவெடுத்துள்ளனர்.

இயக்குநர் ஜே ஜே பெட்ரிக் இயக்கத்தில், சூர்யா தயாரிப்பில் உருவாகி வரும் படம் பொன்மகள் வந்தாள். இப்படத்தில் ஜோதிகா, பாக்யராஜ், பாண்டிரயராஜன், பார்த்திபன், பிரதாப் போத்தன், தியாகராஜன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு 96 பட புகழ் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இப்படம் கடந்த 28 ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால், கொரோனா ஊரடங்கால், திரையரங்குகள் மூடப்பட்டு, படங்களின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டதாக முதலில் கூறப்பட்டது.

இந்தப் படம் மட்டுமல்ல, விஜய்யின் மாஸ்டர் படம் உள்பட நிறைய படங்களின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது.

மேலும், சிறிய பட்ஜெட் படங்களுக்கு தியேட்டர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என்று கூறப்பட்டது.

இதன் காரணமாக, திரையில் வெளியிடாமல், சிறிய பட்ஜெட் படங்களை டிஜிட்டல் பிளாட்பார்மில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

அந்த வரிசையில், ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படத்தை நேரடியாக அமேசான் பிரைமில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும், இதன் மூலம் படத்தின் வசூல் பட்ஜெட்டை விட இருமடங்கு லாபம் கிடைத்துள்ளதாகவும் தகவல் பரவியது.

இந்த நிலையில், இது குறித்து திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆர்.பன்னீர்செல்வம் இன்று அறிவிக்கை வெளியிட்டார்.

அதில், ஊடகங்களில் வெளியான செய்தி இன்று திரையரங்கு உரிமையாளர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

2டி நிறுவனம் தயாரிப்பில் ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள் படம் திரைக்கு வராமல் நேரடியாக OTT Platformல் வெளிவரப்போவதாக செய்தி வெளிவந்தது.

கொரோனா காரணமாக மொத்த திரையுலகமும் நெருக்கடியில் இருக்கும்போது சந்தர்ப்பத்தை பயன்படுத்தி 1000 திரையரங்கு உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கியுள்ளனர்.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்களை தொடர்பு கொண்ட போது எங்களது கோரிக்கையை ஏற்பதாய் இல்லை.

ஆதலால், இனிமேல், அந்த தயாரிப்பாளர் மற்றும் அவரைச் சார்ந்தோர் வெளியிடும் படங்களை OTT Platformல் மட்டுமே வெளியிட்டுக் கொள்ளட்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

இதன் காரணமாக தற்போது தயாரிப்பு நிறுவனம் அதிர்ச்சியடைந்துள்ளது.

SOURCER SIVAKUMAR
Previous articleகில்லட்டின் (Guillotine) கருவி பற்றி தெரியுமா?
Next articleகர்நாடகா: கொரோனா நோயாளிகளுக்கு கன்வாலெஸ்கண்ட் பிளாஸ்மா தெரபி சிகிச்சை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here