Home சினிமா கோலிவுட் 22 வருடங்களை கடந்த காதல் மன்னன்!

22 வருடங்களை கடந்த காதல் மன்னன்!

511
0
22 Years Of Kadhal Manan

Kadhal Mannan, Ajith காதல் மன்னன் வெளியாகி இன்று மார்ச் 6 ஆம் தேதி உடன் 22 வருடங்கள் ஆகியுள்ளது.

இயக்குநர் சரண் இயக்கத்தில், அஜித் Ajith நடிப்பில் கடந்த 1998 ஆம் ஆண்டு மார்ச் 6 ஆம் தேதி வெளியான படம் காதல் மன்னன் Kadhal Mannan.

காதல் மன்னன் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மானு.

இப்படத்தில் இவருடன் இணைந்து எம்.எஸ்.விஸ்வநாதன், விவேக், கரண் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த படத்தில் அஜித் சிவா என்ற ரோலிலும் மானு திலோத்தம்மா என்ற ரோலிலும் நடித்திருந்தனர்.

சிவா – திலோத்தம்மா என்ற ஜோடியை ரசிகர்கள் யாரும் மறந்திருக்கமாட்டார்கள்.

ஒரு மெக்கானிக்காக இருந்து கொண்டு பெட்டிங் ஒன்றை மட்டும் வைத்துக்கொண்டு ஹீரோயினை சந்திக்கும் ஹீரோதான் நம்ம தல.

ஹீரோயினை சந்தித்த பிறகு என்ன காதல்தான். அன்றைய காலகட்டங்களில் அஜித் என்னவோ காதல் படங்களில்தான் அதிகளவில் நடித்திருந்தார்.

இவ்வளவு ஏன், ஷாலினியைகூட காதலித்துதான் திருமணம் செய்து கொண்டுள்ளார். ஆம், அமர்க்களம் படத்தின் மூலம் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

காதல் கோட்டை, காதல் மன்னன், உல்லாசம், பூவெல்லாம் கேட்டுப்பார், நீ வருவாய் என, ஆனந்த பூங்காற்றே, அமர்க்களம் ஆகிய படங்கள் வரிசையாக காதல் படங்களாவே அமைந்தது.

காதல் மன்னன் (Kadhal Mannan)

இந்த நிலையில், காதல் மன்னன் படம் வெளியாகி 22 ஆண்டுகள் கடந்த நிலையில், தற்போது டுவிட்டரில் காதல் மன்னன் #22YearsOfKadhalMannan ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

இதனை தற்போது தல ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். காதல் மன்னன் புகைப்படங்களை டுவிட்டரில் பதிவிட்டு டிரெண்டாக்கி வருகின்றனர்.

அதோடு வலிமை ஹேஷ்டேக்கையும் டிரெண்டாக்கி வருகின்றனர். மேலும், இன்றைய தினத்தில் கூட வலிமை குறித்து ஏதேனும் அப்டேட் வருமா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதற்கிடையில், காதல் மன்னன் திலோ அண்மையில் அஜித் குறித்து பேசிய வீடியோ ஒன்றை பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர்.

அதில், திலோ கூறியிருப்பதாவது: வெறும் 50 சதவிகித பங்களிப்பை மட்டுமே நான் கொடுத்ததால் அஜித் என்னிடம் கோபப்பட்டார்.

எனக்கு நடிப்பில் விருப்பம் இல்லை. ஆதலால், நான் சினிமாவில் இருந்து விலகிவிட்டேன். நான் அவருடைய பெரிய ரசிகை.

மறுபடியும் என்னை அவர் நடிப்பதற்கு அழைத்தால் கண்டிப்பாக செல்வேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

இப்படத்தைத் தொடர்ந்து அவர் என்ன சத்தம் இந்த நேரம் என்ற படத்தில் நடித்துள்ளார்.

காதல் மன்னன் படம் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 108 க்கும் அதிகமான திரையரங்குகளில் திரையிடப்பட்டது.

இந்தப் படத்திற்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது அஜித் வலிமை படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். ஹெச் வினோத் – போனி கபூர் கூட்டணியில் இந்தப் படம் உருவாகி வருகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் மற்றும் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது.

இதற்கிடையில், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் 2ம் ஆண்டு நினைவு தின திதி நிகழ்வில் அஜித் கலந்து கொண்டார்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் வீடியோ வெளியாகி வைரலானது. மேலும், அஜித்தின் மகன் ஆத்விக்கின் பிறந்தநாள் கொண்டாட்டமும் சிறப்பாக நடந்தது.

தொடர்ந்து அஜித் ரசிகர்களுக்கு அடுத்தடுத்து அப்டேட் வந்து கொண்டே தான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here