Home சினிமா கோலிவுட் THALABDayCarnivalBegins: தொடங்கியது தல அஜித்தின் பர்த்டே கார்னிவல்!

THALABDayCarnivalBegins: தொடங்கியது தல அஜித்தின் பர்த்டே கார்னிவல்!

323
0
thala birthday

THALABDayCarnivalBegins: தொடங்கியது தல அஜித்தின் பர்த்டே கார்னிவல்! தல அஜித் வரும் மே 1 ஆம் தேதி தனது 49 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், THALABDayCarnivalBegins என்ற ஹேஷ்டேக் மூலம் தல ரசிகர்கள் இப்போதே கொண்டாட தொடங்கிவிட்டனர்.

அஜித் பிறந்தநாளுக்கு முன்னதாகவே தல ரசிகர்கள் THALABDayCarnivalBegins என்ற டுவிட்டர் ஹேஷ்டேக் மூலம் அவரது பிறந்தநாள் கொண்டாட்டத்தை தொடங்கியுள்ளனர்.

தமிழ் சினிமாவில் தனது தன்னம்பிக்கை, விடா முயற்சி, கடின உழைப்பு ஆகியவற்றின் மூலமே உச்சம் தொட்டவர் தல அஜித். இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

இவருக்கு மட்டுமல்ல, தல அஜித் என்ற பெயருக்கு கலங்கம் நேர்ந்தால் இவரது ரசிகர்கள் பொருத்துக் கொள்ள மாட்டார்கள். வேறு யாரேனும், அஜித் பெயரை தவறாக பயன்படுத்தவும் விடமாட்டார்கள்.

அஜித் தான் உண்டு தனது வேலை உண்டு என்று இருப்பவர். தனது ரசிகர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார்.

எப்போதும், யாரைப் பற்றியும் தவறான கருத்துக்களை பதிவு செய்யவும் மாட்டார். கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது 20 ஆவது ஆண்டு திருமண நாளை சிறப்பாக கொண்டாடியுள்ளார்.

இந்த நிலையில், வரும் மே 1 ஆம் தேதி அஜித் தனது 49 ஆவது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார்.

இதன் காரணமாக தற்போதே அவரது பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில், THALABDayCarnivalBegins என்ற டுவிட்டர் ஹேஷ்டேக்கை உருவாக்கி அவரது பிறந்தநாள் கொண்டாட்டத்தை தொடங்கியுள்ளனர்.

மேலும், அஜித் நடித்த ஹிட் படங்கள், அவரது பாடல்கள், அவரது நடிப்பில் வந்த முக்கியமான காட்சிகள், காதல் காட்சிகள் என்று பலவற்றையும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து இப்போதிலிருந்தே அஜித் பிறந்தநாளை வருகின்றனர்.

SOURCER SIVAKUMAR
Previous articleமராட்டியத்தில் 96 காவலர்களுக்கு தொற்றியது கொரோனா
Next articleசூரரைப் போற்று அடுத்த பாடலை அறிவித்த ஜிவி பிரகாஷ்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here