Home சினிமா கோலிவுட் எம்ஜிஆரின் ரிக்‌ஷாக்காரன் சாதனையை முறியடித்த தல அஜித்தின் சிட்டிசன்!

எம்ஜிஆரின் ரிக்‌ஷாக்காரன் சாதனையை முறியடித்த தல அஜித்தின் சிட்டிசன்!

358
0
MGR and Thala Ajith

Thala Ajith Citizen Movie; எம்ஜிஆரின் ரிக்‌ஷாக்காரன் சாதனையை முறியடித்த தல அஜித்தின் சிட்டிசன்! அட்வான்ஸ் புக்கிங்கில் தல அஜித்தின் சிட்டிசன் படம் எம்ஜிஆரின் ரிக்‌ஷாக்காரன் சாதனையை முறியடித்துள்ளது.

சிட்டிசன் படம் எம்ஜிஆரின் ரிக்‌ஷாக்காரன் படத்தின் சாதனையை முறியடித்துள்ளது.

இயக்குநர் கிறிஷ்ணன் நாயர் இயக்கத்தில் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் நடிப்பில் கடந்த 1971 ஆம் ஆண்டு மே 29 ஆம் தேதி திரைக்கு வந்த படம் ரிக்‌ஷாக்காரன்.

எம்ஜிஆர் படம் என்றாலே சொல்லவே வேணாம் குறைந்தது 100 நாட்களுக்கு மேலாக ஓடிவிடும். அந்த வகையிலும், இந்த படமும் அப்படித்தான். நூறு நாட்களுக்கு மேல் ஓடி பாக்ஸ் ஆபிஸ் வசூலும் குவித்துள்ளது.

இந்தப் படத்திற்காக எம்ஜிஆருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் கிடைத்தது. இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, ரிக்‌ஷாக்காரன் பாலிவுட்டில் ரிக்‌ஷாவாலா என்ற டைட்டிலில் ரீமேக் செய்யப்பட்டது.

ரிக்‌ஷாக்காரன் படத்தில் இடம்பெற்றுள்ள கடலோரம் வாங்கிய காற்று, பொன்னழகு பெண்மை, அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும், அழகிய தமிழ் மகள், பம்பை உடுக்கை கட்டி ஆகிய பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளன. இன்றும், ரசிகர்களின் செவிகளுக்கு தேனூட்டும் வகையிலேயே அமைந்துள்ளது.

பம்பை உடுக்கை கட்டி என்ற பாடலைத் தவிர மற்ற அனைத்து பாடல்களையும் வாலி எழுதியுள்ளார். டிஎம் சௌந்தரராஜன், பி சுசீலா மற்றும் எல்.ஆர்.ஈஸ்வரி ஆகியோர் இந்தப் பாடல்களை பாடியுள்ளனர்.

சென்னையில் உள்ள தேவி பேரடைஸ் திரையரங்கில் கிட்டத்தட்ட 163 நாட்களுக்கு மேல் ஓடி வணீக ரீதியாக நல்ல வரவேற்பு கொடுத்துள்ளது.

இந்த நிலையில், சென்னையில் உள்ள தேவி சினிமாவில் ரிக்‌ஷாக்காரன் படத்திற்கு 12 நாட்கள் அட்வான்ஸ் புக்கிங் செய்யப்பட்டது.

ஆனால், இதே போன்று தல அஜித் நடிப்பில் வந்த சிட்டிசன் படத்திற்காக அதே தேவி சினிமாவில் 13 நாட்கள் அட்வான்ஸ் புக்கிங் செய்யப்பட்டது.

இதன் மூலம் எம்ஜிஆரின் சாதனையை தல அஜித்தின் சிட்டிசன் படம் முறியடித்துள்ளது. அஜித்தின் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த படங்களில் சிட்டிசன் படமும் ஒன்று.

இயக்குநர் சரவணன் சுப்பையா இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் அஜித்துடன் இணைந்து மீனா, பாண்டியன், நிழல்கள் ரவி, வசுந்தரா தாஸ், நக்மா ஆகியோர் பலர் நடித்திருந்தனர். நேற்றுடன் சிட்டிசன் படம் வெளியாகி 19 ஆண்டுகள் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது தல அஜித் வலிமை படத்தில் நடித்து வருகிறார். கொரோனா லாக்டவுன் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன.

ஹெச் வினோத் வலிமை படத்தை இயக்கி வருகிறார். தயாரிப்பாளர் போனி கபூர் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். ஹூமா குரேஸி வலிமை படத்தில் தல அஜித்துக்கு ஜோடியாக நடிப்பதாக கூறப்படுகிறது.

யுவன் சங்கர் ராஜா படத்திற்கு இசையமைத்துள்ளார். கொரோனா லாக்டவுன் முற்றிலும் சரியான பிறகு வலிமை படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது.

SOURCER SIVAKUMAR
Previous articleதமிழ்நாட்டின் கொரோனா தொற்று 35000ஐ நெருங்கியது, இறந்தோர் எண்ணிக்கை 307 ஆக உயர்வு
Next articleபிறந்தநாளன்று காலமானார் அன்பழகன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here