Child Labour Day; குழந்தை தொழிலாளர் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம்: அஜித் ரசிகர்கள் வேண்டுகோள்! குழந்தை தொழிலாளர் இல்லாத இந்தியாவை, தமிழகத்தை உருவாக்குவோம் என்று தல அஜித் ரசிகர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
அஜித் ரசிகர்கள், குழந்தை தொழிலாளர்கள் இல்லாத இந்தியாவை உருவாக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அரசிடமும், நடிகர்களிடமும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
உலகில் பல்வேறு பகுதிகளில் குழந்தை தொழிலாளர் முறை உள்ளது. பாலியல் தொழில், விவசாயம், குவாரி, கட்டிடத் தொழில், பெற்றோரின் தொழிலுக்கு உதவுதல், சிறிய வணிகத்தில் உணவுப் பொருள் விற்பனை, வீட்டு வேலைகள் செய்தவதிலும் குழந்தை தொழிலாளர்கள் ஈடுபடுகின்றனர்.
குழந்தையும் தெய்வமும் ஒன்று கூறும் நம் சமூகம் தான், புத்தகம் எடுக்க வேண்டிய கைகளில் குடும்பத்தை சுமக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தான் கடந்த 1986 ஆம் ஆண்டு குழந்தை தொழிலாளர் முறை தடுப்புச் சட்டம் இயற்றப்பட்டது. மேலும், 1987 ஆம் ஆண்டு குழந்தை தொழிலாளர் பற்றிய தேசியக் கொள்கை உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
உலகெங்கிலும் குழந்தை தொழிலாளர் முறைக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12 ஆம் தேதி குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், ஜூன் 12 ஆம் தேதியான இன்று குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம். இதனை முன்னிட்டு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, குழந்தைத் தொழிலாளர் முறையை அகற்றுவதில் இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என்று கூறியுள்ளார்.
இது குறித்து தல அஜித்தின் ரசிகர்கள் கூறுகையில், குழந்தை தொழிலாளர் இல்லாத (இந்தியாவை) தமிழகத்தை உருவாக்குவோம். அரசும், நடிகர்களும் தொலைக்காட்சியிலும், படத்திலும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னதாக தல அஜித்தின் புகைப்படத்தை பதிவிட்டு தல என்பதற்கான அர்த்தம் தன்னம்பிக்கை லட்சியம் என்று கூறி பதிவிட்டு வருகின்றனர்.