Home சினிமா கோலிவுட் வலிமை தயாரிப்பாளருக்கு கொரோனாவா?: வெளியான அதிர்ச்சி தகவல்!

வலிமை தயாரிப்பாளருக்கு கொரோனாவா?: வெளியான அதிர்ச்சி தகவல்!

285
0
Boney Kapoor Corona Virus

Boney Kapoor Corona Virus; வலிமை தயாரிப்பாளருக்கு கொரோனாவா?: வெளியான அதிர்ச்சி தகவல்! தல அஜித்தின் வலிமை படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர் போனி கபூருக்கு கொரோனா என்று செய்தி வெளியாகி வரும் நிலையில், இது குறித்து அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக வெளியான செய்தி குறித்து வலிமை பட தயாரிப்பாளர் போனி கபூர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் ஹெச் வினோத் இயக்கத்தில் தல அஜித்தின் நடிப்பில் வலிமை படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தை போனி கபூர் தான் தயாரித்து வருகிறார்.

சென்னை, ஹைதராபாத் ஆகிய பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில், கொரோனா லாக்டவுன் காரணமாக அனைத்து படப்பிடிப்புகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வலிமை தயாரிப்பாளருக்கு கொரோனா தொற்று இருப்பதாக சமூக வலைதளங்களில் செய்தி வெளியானது.

இது குறித்து தயாரிப்பாளர் போனி கபூர் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: அதில், அவரது வீட்டு உதவியாளரான 23 வயது நிரம்பிய சரண் சாஹூ என்பவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தப் பணியாளர் கடந்த சனிக்கிழமை முதல் உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளார்.

இதையடுத்து மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் சாஹூ என்பவரை தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் சிகிச்சை பெற அழைத்து சென்றுள்ளனர்.

அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போனி கபூர், ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் ஆகியோர் நலமுடன் தான் இருக்கிறார்கள்.

அவர்களுக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் ஏதும் இல்லை என்று தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

SOURCER SIVAKUMAR
Previous articleஜூனியர் என்டிஆர் பிறந்தநாள்: ரசிகர்களை ஏமாற்றிய ஆர்ஆர்ஆர் படக்குழு!
Next articleடுவிட்டரிலிருந்து விலகிய கஸ்தூரி? இதுதான் காரணமா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here