Viswasam; மலேசியா, பிரான்ஸில் மீண்டும் வெளியான தல அஜித்தின் விஸ்வாசம்! தல அஜித் நடிப்பில் கடந்தாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வந்த விஸ்வாசம் படம் மீண்டும் மலேசியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
தல அஜித்தின் விஸ்வாசம் படம் மீண்டும் மலேசியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இன்று வெளியாகியுள்ளது.
இயக்குநர் சிவா இயக்கத்தில் தல அஜித், நயன்தாரா, அனிகா ஆகியோரது நடிப்பில் கடந்தாண்டு பொங்கலுக்கு வந்த படம் விஸ்வாசம்.
குடும்ப கதையை மையப்படுத்தி திரைக்கு வந்த இந்தப் படம் அப்பாவுக்கும், மகளுக்கும் இடையிலான பாசப் பிணைப்பை வெளிக்காட்டியது.
ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற இப்படம் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கொடுத்தது.
படம் மட்டுமல்லாமல், படத்தில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு பாடல்களும் ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாகவே அமைந்துள்ளது. இமான் இசை என்றால் சும்மாவா.
இப்படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பைத் தொடர்ந்து தல அஜித் இயக்குநர் ஹெச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்தார்.
இந்தப் படமும் விமர்சன மற்றும் வசூல் ரீதியாக அமோக வரவேற்பு பெற்றது. தற்போது மீண்டும் ஹெச் வினோத் மற்றும் போனி கபூர் கூட்டணியில் இணைந்து வலிமை படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், அஜித் நடித்த விஸ்வாசம் படம் இன்று மீண்டும் மலேசியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் வெளியாகியுள்ளது.
இதே போன்று கடந்தாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வந்த ரஜினிகாந்தின் தர்பார் படமும் வெளியாகியுள்ளது.
தற்போது ரஜினிகாந்த் இயக்குநர் சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார்.
இந்தப் படத்தில் மீனா, குஷ்பு, சதீஷ், கீர்த்தி சுரேஷ், சூரி, நயன்தாரா, பிரகாஷ் ராஜ், லிவிங்ஸ்டன் ஆகியோர் பலர் நடித்து வருகின்றனர். வரும் 2021 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்தப் படம் திரைக்கு வர இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.