Ajith Shalini Hospital Video; மாஸ்க் அணிந்தபடி மனைவியுடன் மருத்துவமனைக்கு சென்று வந்த தல: வைரலாகும் புகைப்படம்! தல அஜித் தனது மனைவி ஷாலினியுடன் தனியார் மருத்துவமனைக்கு சென்று வந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தனது மனைவி ஷாலினியுடன் தனியார் மருத்துவமனைக்கு சென்று வந்த தல அஜித்தின் புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றிக்குப் பிறகு தல அஜித் தனது 60 ஆவது படமான வலிமை படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இந்தப் படத்தையும் இயக்குநர் ஹெச் வினோத் இயக்க, போனி கபூர் தயாரிக்கிறார்.
வலிமை படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். வலிமை படத்தில் தல அஜித்திற்கு ஜோடியாக ஹூமா குரேஸி நடிக்கிறார். மேலும், கார்த்திகேயா கும்மகோண்டா என்ற தெலுங்கு நடிகரும் நடிக்கிறார்.
தற்போது கொரோனா லாக்டவுன் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன.
இந்த நிலையில், கிட்டத்தட்ட 50 நாட்களுக்கு மேலாக வீட்டிலேயே இருந்த தல அஜித் தற்போது தனது மனைவியுடன் வெளியில் சென்று வந்துள்ளார்.
ஆம், தனது மனைவி ஷாலினியுடன் முகத்தில் மாஸ்க் அணிந்தபடி தனியார் மருத்துவமனைக்கு சென்று வந்த தல அஜித்தின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அஜித் ஏன் மருத்துவமனைக்கு சென்றுள்ளார் என்ற கேள்வி எழும் நிலையில், அவரது தந்தை சுப்பிரமணியம் சில வாரங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில், அஜித் மருத்துவமனைக்கு சென்று வந்தாராம்.
இந்த ஒரு வீடியோ போதும், அஜித் சமூக வலைதளங்களை தன் வசப்படுத்திக் கொண்டுள்ளார். ஆம், தல ரசிகர்கள் அஜித்தின் இந்த வீடியோவை மேலும் மேலும் வைரலாக்கி வருகின்றனர்.
லாக்டவுன் முடிந்த பிறகு மீண்டும் வலிமை படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது. வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வலிமை படம் வெளிவரும் என்று கூறப்படுகிறது.
எனினும், கொரோனாவால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்ட நிலையில், வலிமை ரிலீஸ் தள்ளி வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.