Home சினிமா கோலிவுட் உலகளவில் டிரெண்டான THALAPATHYBdayFestCDP!

உலகளவில் டிரெண்டான THALAPATHYBdayFestCDP!

306
0
THALAPATHYBdayFestCDP

உலகளவில் டிரெண்டான THALAPATHYBdayFestCDP! விஜய்யின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு உலகளவில் THALAPATHYBdayFestCDP என்ற டுவிட்டர் ஹேஷ்டேக் 2 ஆவது இடத்தில் டிரெண்டாகி வருகிறது.

THALAPATHYBdayFestCDP என்ற டுவிட்டர் ஹேஷ்டேக் உலகளவில் டிரெண்டாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் தளபதி விஜய். தொடர்ந்து குடும்பக் கதையை மையப்படுத்திய படங்களில் நடித்து வருகிறார்.

பெரும்பாலும் இவரது படங்களில் குழந்தைகளை கவரும் காட்சிகளும், அரசியல் கட்சிகளை விமர்சிக்கும் காட்சிகளும் இடம்பெற்றிருக்கும். அரசியல் தொடர்பான காட்சிகள் இருப்பதாலோ என்னவோ படம் சர்ச்சைக்குப் பிறகே வெளியாகிறது.

ஆனால், மாஸ்டர் படத்தில் கொஞ்சம் விதிவிலக்கு ஏற்பட்டுள்ளது. படப்பிடிப்பு தொடங்கியதிலிருந்து விஜய் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை, படப்பிடிப்பு தளபத்தில் பாஜகவினர் போராட்டம் என்று பல பிரச்சனைகளை கடந்து வந்தது.

சரி, பிரச்சனைகள் எல்லாம் முடிந்து படம் அறிவித்தபடி கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாகும் என்று பார்த்தால் அதுக்குள்ளாக கொரோனா வைரஸ் நாட்டையே உலுக்கியது.

கொரோனா வைரஸ் காரணமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டதோடு, திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன. மேலும், லாக்டவுனும் அமல்படுத்தப்பட்டது. தற்போது, 5ஆவது ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருக்கிறது.

இந்த நிலையில், வரும் 22 ஆம் தேதி தளபதி விஜய் தனது 46 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். விஜய் பிறந்தநாளை கொண்டாடும் வகையில், ரசிகர்கள், பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்து வழக்கம்.

ஆனால், தற்போது நாட்டையே உலுக்கிய கொரோனா வைரஸ் காரணமாக சினிமா தொழிலாளர்கள் முதல் சாதாரண நடுத்தர ஜனங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

ஏராளமானோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்று தளபதி விஜய் தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

எனினும், டுவிட்டரில் THALAPATHYBdayFestCDP என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. ஆம், உலகளவில் THALAPATHYBdayFestCDP இந்த ஹேஷ்டேக் 2ஆவது இடத்தில் டிரெண்டாகி வருகிறது.

இந்த ஹேஷ்டேக் மூலம் விஜய் போஸ்டர் ஒன்றை உருவாக்கி ரசிகர்கள் அதனை டிரெண்டாக்கி வருகின்றனர். விஜய் பிறந்தநாளை முன்னிட்டு மாஸ்டர் படம் குறித்து முக்கியமான அறிவிப்பு அல்லது மாஸ்டர் டிரைலர் குறித்து அப்டேட் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் பிறந்தநாளுக்கு இன்னும் 9 நாட்கள் உள்ள நிலையில், இது குறித்து முறையான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு முன்னதாக நடிகர் அர்ஜூன் தாஸ் கூறுகையில், மாஸ்டர் டிரைலரை 6 முறை பார்த்ததாகவும், மரண மாஸாக இருக்கும் என்றும் அவர் கூறியிருந்தார்.

ஆகையால், இந்தப் பிறந்தநாள் மாஸ்டர் டிரைலர் பிறந்தநாளாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Previous articleநீலாம்பரி ரம்யா கிருஷ்ணன் சென்ற காரில் சரக்கு பாட்டிகள் பறிமுதல்!
Next articleநாளுக்கு நாள் தமிழ்நாட்டில் அதிகரிக்கும் கொரோனா, 1989 புதிய கொரோனா தொற்றுகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here