Master On June 22; விஜய் பிறந்தநாளுக்கு இப்படியொரு பரிசா? விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் வரும் ஜூன் 22 ஆம் தேதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாஸ்டர் படம் வரும் ஜூன் 22 ஆம் தேதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு திரைக்கு வரும் என்று கூறப்படுகிறது.
பிகில் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய் மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்தப் படத்தை விஜய்யின் மாமா சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ளார் என்பது மட்டுமே அனைவரும் அறிந்த ஒன்று.
ஆனால், உண்மையில், இந்தப் படத்தை சேவியர் பிரிட்டோ தனது சொந்த செலவில் தயாரிக்கவில்லையாம்.
மாஸ்டர் படம் ஷூட்டிங் தொடங்குவதற்கு முன்னதாகவே ஆல் ஏரியாவுக்கு ரூ.200 கோடி வரையில் வியாபாரம் பண்ணியிருக்கிறார்கள்.
அந்தப் பணத்தை வைத்தே படத்தையும் முடித்துள்ளார்கள். ஆனால், செலவு மட்டும் ரூ.130 கோடி மட்டுமே.
அப்படி, இப்படி என்று எப்படியோ கஷ்டப்பட்டு மாஸ்டர் படத்தை உருவாக்கிவிட்டார்கள். ஆனால், என்ன வெளியிடமுடியவில்லை.
காரணம், கொரோனா என்ற ஒரு வைரஸ். நாட்டையே உலுக்கிய கொரோனா வைரஸ் காரணமாக 21 நாட்களுக்கு வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆனால், மாஸ்டர் படம் 9 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, கொரோனா இல்லையென்றால் நேற்று மாஸ்டருக்குரிய நாளாக இருந்திருக்கும்.
இந்த நிலையில், மாஸ்டர் மே மாதம் வெளியாகும் என்று தகவல் வந்தது. ஆனால், கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்பிருக்கிறது. அப்படியிருக்கும் போது மே மாதமும் வெளியாக வாய்ப்பில்லை.
கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வருவதற்கு எப்படியும் இன்னும் ஒரு மாதம் ஆகும். அப்படியிருக்கும் போது மாஸ்டர் படம் இப்போதைக்கு திரைக்கு வராது.
மாறாக விஜய் வரும் ஜூன் 22 ஆம் தேதி தனது 46 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
அன்றைய தினத்தில் விஜய்க்கு சிறப்பு சேர்க்கும் வகையில், மாஸ்டர் படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனென்றால் படத்தை எடுத்தது அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் என்பதால், கண்டிப்பாக மாஸ்டர் படம் விஜய் பிறந்தநாளுக்கு வருவதற்கு வாய்ப்பிருக்கிறது.
இதனால்தான் என்னவோ MasterOnJune22 என்ற ஹலோ ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.
இன்னும் சிலர் மாஸ்டர் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரும் என்று கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.