Thalapathy Vijay; மாற்றுத்திறனாளி இளைஞன் கனவை நனவாக்கும் தளபதி விஜய்: லாரன்ஸ் பாராட்டு! மாஸ்டர் படத்திலுள்ள வாத்தி கம்மிங் பாடலை விஜய் முன்பு வாசித்து காட்டுவதற்கு ஆசைப்பட்ட மாற்றுத்திறனாளி இளைஞனின் கனவை தளபதி நனவாக்க இருக்கிறார்.
விஜய் முன்பு, மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் பாடலை மாற்றுத்திறனாளி இளைஞர் ஒருவர் வாசித்து காட்ட இருக்கிறார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர். இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள வாத்தி கம்மிங் பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு கைகளை இழந்த மாற்றுத்திறனாளி இளைஞர் ஒருவர் வாத்தி கம்மிங் பாடலை வாசிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதைக் கண்ட அனிருத் அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, ராகவா லாரன்ஸ் தனது சமூக வலைதள பக்கத்தில், அந்த இளைஞர் பெயர் தான்சேன். தனது மாற்றுத்திறனாளி குழுவில் இருக்கிறார்.
கொரோனா லாக்டவுன் நேரத்தில் 3 நாட்கள் பயிற்சி மேற்கொண்ட பிறகு மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் பாடலை வாசித்திருக்கிறார்.
அனிருத் இசையில் ஒரு பகுதி வாசிக்க வேண்டும் மற்றும் விஜய் முன்னிலையில், இதை வாசிக்க வேண்டும் என்பதை அவரது கனவாக கொண்டுள்ளார்.
இந்த நிலையில், லாரன்ஸின் வேண்டுகோளுக்கிணங்கள் விஜய் மற்றும் அனிருத் இருவரும் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர்.
இதற்கு ராகவா லாரன்ஸ் நன்றி தெரிவித்துள்ளார். மேலும், அவர் கூறியிருப்பதாவது: நண்பன் விஜய்யிடம் பேசினேன். லாக்டவுன் முடிந்ததும் , அந்த இளைஞரை அழைத்து வந்து தன் முன்னால் வாசித்துக் காட்ட சொன்னார்.
அதே போன்று இசையமைப்பாளர் அனிருத்தும், அந்த இளைஞருடைய விருப்பத்திற்கேற்ப, தன்னுடைய இசையில் அவரை வாசிக்க வைப்பதாக கூறியுள்ளார்.
மாற்றுத்திறனாளி இளைஞனின் கனவை நனவாக்கிய தளபதி விஜய்க்கும், அனிருத்துக்கும் என்னுடைய நன்றி என்று தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.