Home சினிமா கோலிவுட் முதலில் மெர்சல் இப்போது பிகில் ஆல்பம்: அடுத்தடுத்து சாதனை படைக்கும் விஜய்!

முதலில் மெர்சல் இப்போது பிகில் ஆல்பம்: அடுத்தடுத்து சாதனை படைக்கும் விஜய்!

396
0
Bigil Album Hits 300 M Views

Vijay Bigil Album; முதலில் மெர்சல் இப்போது பிகில் ஆல்பம்: அடுத்தடுத்து சாதனை படைக்கும் விஜய்! தளபதி விஜய் நடிப்பில் வந்த பிகில் படத்தின் ஆல்பம் யூடியூப்பில் 300 மில்லியன் வியூஸ் பெற்று சாதனை படைத்துள்ளது.

பிகில் படத்தின் ஆல்பம் யூடியூப்பில் 300 மில்லியன் வியூஸ் பெற்று சாதனை படைத்துள்ளது.

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்தாண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வந்த படம் பிகில்.

பிகில் படத்தில் விஜய் ராயப்பன், மைக்கேல், பிகில் ஆகிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் என்று போஸ்டர் வெளியான போது அனைவரும் கூறி வந்தனர்.

ஆனால், படம் வெளியான பிறகுதான் ராயப்பன் மற்றும் மைக்கேல் ராயப்பன் (பிகில்) என்று இரு கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்துள்ளார் என்பது தெரிய வருகிறது. அதுவும், அபபா, மகன் என்ற கதாபாத்திரம்.

பெண்களின் கால்பந்து விளையாட்டை மையப்படுத்திய இந்தப் படத்தின் ஒவ்வொரு பாடல்களும் ரசிகர்களை ரசிக்கும்படி வைத்துள்ளது.

ஆமாம், படத்திற்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான். அப்போ பாடல்களுக்கு சொல்லவா வேண்டும். ஒவ்வொரு பாடல்களும் யூடியூப்பில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

பிகில் ஆல்பம் Bigil Album யூடியூப்பில் மட்டும் 300 மில்லியன் வியூஸ் பெற்றுள்ளது. சிங்கப்பெண்ணே பாடல் 93.1 மில்லியன் வியூஸ், இதற்குத்தான் பாடலுக்கு 2.28 மில்லியன், காலமே 3.71 மில்லியன் வியூஸ்,

மாதரே 3.75 மில்லியன், வெறித்தனம் 132 மில்லியன், உனக்காக 38.8 மில்லியன், பிகில் பிகில் பிகிலுமா 40.8 மில்லியன், பிகில் 3.15 மில்லியன் வியூஸ் பெற்று தனித்தனியாகவும், ஆல்பமாகவும் சாதனை படைத்துள்ளது.

இதற்கு முன்னதாக வந்த மெர்சல் படம் 400 மில்லியன் வியூஸ் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி அடுத்தடுத்து விஜய் நடித்த படங்கள் புதிய சாதனை படைத்து வருகிறது. அண்மையில் கில்லி படம் சன் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு 17.78 டிஆர்பி ரேட்டிங் பெற்றது. விஜய்தான் டிஆர்பி கிங் என்றும் அழைக்கப்பட்டார்.

#Verithanam – 132M
#Singappenney – 93M
#Unakaga – 38.8M
#BigilBigilBigiluma -40.8M
#Maathare – 3.75M
#Idharkuthaan -2.28M
#Kaalame – 3.7M
#JukeBox -3.15M

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here