Bigil Bike Ride Video; இது யாரு நம்ம தளபதியா? வைரலாகும் விஜய்யின் பைக் ஸ்டண்ட் வீடியோ! பிகில் படத்தில் விஜய் செய்த பைக் ஸ்டண்ட் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வந்த படம் பிகில்.
பெண்களின் கால்பந்தை மையப்படுத்திய இப்படத்தில் மைக்கேல் மற்றும் ராயப்பன் என்று விஜய் அப்பா – மகன் என்ரு இரு கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.
மைக்கேல் (பிகில்) கால்பந்து கோச்சர், ராயப்பன் ரௌடி போன்று ஒரு கதாபாத்திரம். பெண்கள் கால்பந்து இறுதிபோட்டின் போது விஜய்யை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றிருப்பார்கள்.
சிறிது நேரம் கழித்து விஜய் அங்கிருந்து புறப்பட்டு கால்பந்து மைதானத்திற்கு வருவார். காவல் நிலையத்தில் இருந்து வரும் விஜய் பைக்கில் புறப்பட்டு வேகமாக வருவார்.
இந்த காட்சி எடுக்கப்பட்ட போது படப்பிடிப்பு புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த நிலையில், தற்போது விஜய் பிகில் படத்திற்காக செய்த அசல் ஸ்டண்ட் காட்சி என்று இரண்டு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஒரு பிஸியான சாலையில், விஜய் வேகமாக பைக்கில் செல்வது போன்றும், டேர்னிங்கின் போது ஸ்கிட் அடிப்பது போன்றும் பதிவாகியுள்ள அந்த வீடியோதான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பிகில் படம் ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூல் குவித்ததாக கூறப்பட்டது. அப்போது, பிகில் படத்தில் வரி ஏய்ப்பு நடந்ததாக கூறி விஜய், ஏஜிஎஸ் நிறுவனம், சினிமா பைனான்சியர் அன்புச் செழியன் வீடு என்று பல இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
எனினும் விஜய் வீட்டில் எந்த ஆவணமும், பணமும் கைப்பற்றவில்லை. வந்ததற்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டு வருமான வரித்துறையினர் வந்த வேகத்தில் திரும்பி வந்தனர்.
பிகில் படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து விஜய் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது கொரோனா வைரஸ் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ள நிலையில், வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன் விளைவாக மாஸ்டர் படம் அறிவித்தபடி ஏப்ரல் 9 ஆம் தேதி ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக மாஸ்டர் டிரைலர் கடந்த 22 ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அன்று ஒரு நாள் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை ஊரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.