Home சினிமா கோலிவுட் வைரலாகும் விஜய்யின் லயோலா கல்லூரி புகைப்படம்!

வைரலாகும் விஜய்யின் லயோலா கல்லூரி புகைப்படம்!

661
0
Vijay College Pictures

Thalapathy Vijay College Picture; வைரலாகும் விஜய்யின் லயோலா கல்லூரி புகைப்படம்! விஜய்யுடன் கல்லூரியில் படிக்கும்போது எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விஜய்யின் கல்லூரி புகைப்படத்தை அவரது நண்பர் சஞ்சீவ் வெளியிட்டுள்ளார். தளபதி விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம். உலகம் முழுவதும் ரசிகர்களை வைத்திருக்கிறார்.

பிகில் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் வெளியீட்டிற்காக காத்துக்கொண்டிருக்கிறார்.

கடந்த 9 ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில், கொரோனா காரணமாக ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. வரும் ஜூன் 22 ஆம் தேதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு திரைக்கு வரும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், விஜய்யின் கல்லூரி புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விஜய் சென்னையில் உள்ள லயோலா கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது எடுத்த படம் அது. அதில், விஜய், கோட், சூட் அணிருந்திருப்பது போன்று இருக்கிறது.

நடிகர் சஞ்சீவ் தான் அந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். Major Throwback! College days.. Gang of friends forever என சஞ்சீவ் குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் சஞ்சீவ் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு முன்பு பல படங்களில் விஜய்யுடன் இணைந்து சஞ்சீவ் நடித்திருந்தார்.

Vijay Loyola College Pictures

SOURCER SIVAKUMAR
Previous articleவெறும் லுங்கியோடு லண்டனில் டான்ஸ்: போலீசை கண்டு மிரண்ட சாண்டி!
Next articleஜோதிகா கருத்து: மதங்களை கடந்து மனிதமே முக்கியம்: சூர்யா வெளியிட்ட அறிக்கை!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here