Home சினிமா கோலிவுட் தீபாவளியா? பொங்கலா? மாஸ்டர் குறித்து சேவியர் பிரிட்டோ தகவல்!

தீபாவளியா? பொங்கலா? மாஸ்டர் குறித்து சேவியர் பிரிட்டோ தகவல்!

0
338
Thalapathy Vijay Master Movie

Master Theatre Release; தீபாவளியா? பொங்கலா? மாஸ்டர் குறித்து சேவியர் பிரிட்டோ தகவல்! தளபதி விஜய் நடித்துள்ள மாஸ்டர் படம் எப்போது திரைக்கு வரும் என்பது குறித்து தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ புதிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.

மாஸ்டர் எப்போது திரைக்கு வரும் என்பது குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் மாஸ்டர்.

அதிக பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை விஜய்யின் மாமா சேவியர் பிரிட்டோ தனது எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார்.

இளம் இசையமைப்பாளர் அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். ஏற்கனவே இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள 12 பாடல்களில் 8 பாடல்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் அமோக வரவேற்பு பெற்றது.

கடந்த மார்ச் மாதம் மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் பாடல்கள் வெளியிடப்பட்டது. இதையடுத்து மாஸ்டர் டிரைலர் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

மாஸ்டர் படமும் கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால், நாடு முழுவதும் அச்சுறுத்திய கொரோனா வைரஸ் காரணமாக, திரையரங்குகள் மூடப்பட்ட நிலையில், படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது.

வரும் 31 ஆம் தேதி வரையில் 6ஆம் கட்ட ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஷாப்பிங் மால்கள், திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள் உள்ளிட்டவை இயங்குவதற்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

திரையரங்குகள் திறக்கப்படாததால், பொன்மகள் வந்தாள், பென்குயின் ஆகிய படங்கள் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதே போன்று மாஸ்டர் படமும் வெளியாக வாய்ப்பிருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில், தனியார் இணையதளம் ஒன்றிற்கு பேட்டியளித்த தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ மாஸ்டர் படம் குறித்து புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதன்படி, திரையரங்குகள் எப்போது திறக்கப்படுமோ அப்போதுதான் மாஸ்டர் படம் வெளியிடப்படும்.

அது, தீபாவளிக்கோ அல்லது பொங்கலுக்கோ என்பது திரையரங்குகள் திறக்கப்படுவதை பொறுத்துதான் முடிவு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் திரையரங்குகள் திறக்கப்பட்டதும் பெரிய ஹிட் படம் என்றால் அது மாஸ்டர் படமாக இருக்கும். விஜய்யும் திரையரங்குகள் திறக்கப்பட்ட பிறகு மாஸ்டர் படத்தை வெளியிட வேண்டும் என்பதில் திட்டவட்டமாக இருக்கிறார் என்று குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here