Thalapathy Vijay On Sun TV; சன் தொலைக்காட்சியில் தலைவா: டுவிட்டரில் டிரெண்டாகும் தளபதி விஜய்! தளபதி விஜய் நடிப்பில் வெளியான தலைவா படம் இன்று மாலை 6.30 மணிக்கு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது.
தலைவா படம் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது.
இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில், தளபதி விஜய், சத்யராஜ், அமலா பால், சந்தானம் ஆகியோர் பலர் நடிப்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9 ஆம் தேதி திரைக்கு வந்த படம் தலைவா.
ஆக்ஷன் த்ரில்லர் கதையை மையப்படுத்தி திரைக்கு வந்த இந்தப் படத்தில், விஷ்வா என்ற ரோலில் நடித்துள்ளார்.
அதோடு, டான்ஸரான விஜய், தண்ணீர் சப்ளை செய்யும் பிஸினஸ்மேனாக நடித்துள்ளார்.
சத்யராஜ் இவரது அப்பா. மும்பை டான். ஒரு கட்டத்தில் போலீஸ் அதான் ஏசிபி அதிகாரியான அமலா பால் சத்யராஜை கைது செய்கிறார்.
ஆனால், போலீஸ் வாகனத்தில் சத்யராஜ் ஏறியவுடன் பாம் வெடித்து அவர் பரிதாபமாக உயிரிழக்கிறார்.
இதையடுத்து விஜய் மும்பை டானாகிறார். அமலா பால், தனது வேலையை ராஜினாமா செய்து விஜய்யை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிறார். இது தான் கதை.
இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள வாங்கண்ணா வணக்கங்கண்ணா என்ற பாடலை விஜய் மற்றும் சந்தானம் இருவரும் இணைந்து பாடியுள்ளனர். இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனம் பெற்றது.
இப்படத்தின் மூலம் அமலா பால் மற்றும் இயக்குநர் ஏ.எல், விஜய் காதலர்களாக மாறியுள்ளனர். இந்த நிலையில், இந்தப் படம் திரைக்கு வந்து 7 ஆண்டுகள் ஆன நிலையில், பலமுறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது.
எனினும் கொரோனா ஊரடங்கு காரணமாக அனைவருமே வீட்டில் இருக்கும் நிலையில், தலைவா படம் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது.