Home சினிமா கோலிவுட் நயன்தாராவின் அழகின் ரகசியம்: இதைத் தான் தினமும் செய்வாராம்!

நயன்தாராவின் அழகின் ரகசியம்: இதைத் தான் தினமும் செய்வாராம்!

397
0
Nayanthara Beauty Tips

நயன்தாராவின் அழகின் ரகசியம்: இதைத் தான் தினமும் செய்வாராம்! நடிகை நயன்தாரா அழகாகவும், ஸ்லிம்மாகவும் இருப்பதற்கு இந்த 5 காரணங்கள் தான் முக்கியமாக பார்க்கப்படுகிறது.

நயன்தாராவின் அழகின் ரகசியம் குறித்து 5 முக்கிய காரணங்கள் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக வளர்ந்து நிற்பவர் நடிகை நயன்தாரா. சரத்குமார் நடித்த ஐயா படத்தில் ஹோம்லி கேர்ளாக நடித்து ரசிகர்களின் அன்பையும், பாராட்டையும் பெற்றார்.

ஐயா படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பு நயன்தாராவை அடுத்தகட்டத்திற்கு கொண்டு சென்றது. ஐயா படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா நடித்த சந்திரமுகி படத்தில் நடித்தார். இந்தப் படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு கொடுத்தது.

அடுத்து, கஜினி, வல்லவன், பில்லா, ஏகன், ராஜா ராணி, ஆரம்பம், தனி ஒருவன், மாயா, இது நம்ம ஆளு, இரு முகன், டோரா, அறம், கோலமாவு கோகிலா, இமைக்கா நொடிகள், விஸ்வாசம், ஐரா, மிஸ்டர் லோக்கல், வேலைக்காரன், தர்பார், பிகில் என்று ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

தற்போது, நெற்றிக்கண், மூக்குத்தி அம்மன், அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், நயன்தாரா இம்முட்டு அழகாக இருப்பதற்கும், தொடர்ந்து அவர் ஸ்லிம்மாக இருப்பதற்கும் என்ன காரணம் என்று பலரும் தங்களுக்குள்ளாகவே கேள்வி எழுப்பி வந்தனர்.

தற்போது அதற்கு காரணம் தெரிந்துவிட்டது. ஆம், நயன்தாரா தினமும் இவற்றை மட்டும் செய்து வருகிறாராம்.

அதன் சில டிப்ஸ் இதோ உங்களுக்காக…

தினமும் தனது முகத்தை அடிக்கடி தண்ணீரால் சுத்தம் செய்து கொள்வாராம். ஏனென்றால், எப்போதும் தனது முகத்தில் ஈரப்பதம் இருக்க வேண்டும் என்பதால் அப்படி செய்வாராம். மேலும், அது முகத்தை டிரை ஆக்காது.

அதிகளவில் பழ ஜூஸ்களை விரும்பி அருந்துவாராம். சாப்பாட்டை விட ஜூஸ் தான் அதிகம் குடிப்பாராம்.

தினந்தோறும் தனது கூந்தலுக்கு எண்ணெய் வைத்து பராமரித்துக் கொள்வாராம். பெரும்பாலும் நடிகைகள் அவ்வாறு செய்வது கிடையாது என்று கூறப்படுகிறது. அதற்கு விதிவிலக்காக நயன்தாரா தினமும் எண்ணெய் வைத்துக் கொள்வாராம்.

எவ்வளவு பிஸியான காலகட்டத்திலும் உடற்பயிற்சி செய்வதை மட்டும் தவிர்க்கவே மாட்டாராம். தினந்தோறும், உடற்பயிற்சி செய்து கொள்வாராம்.

எப்போதும் சிரித்துக் கொண்டே இருப்பாராம். புன்னகையுடன் தோன்றுவதற்கு இதுதான் காரணம். அவர் கோபமே படமாட்டாராம்.

இந்த 5 முக்கிய காரணங்களால் தான் நயன்தாரா 35 வயதான போதிலும் இன்னும், அழகாகவும், ஸ்லிம்மாகவும் தோற்றமளிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் காதலித்து வருவது அனைவரும் அறிந்த ஒன்று தான். ஆனால், இதுவரையில் அவர்கள் திருமணம் பற்றி எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.

கடந்த ஆண்டே நயன்தாராவிற்கு திருமணம் நடக்கும் என்று பிரபல ஜோதிடர் கூறியிருந்தார். ஆனால், இதுவரை அப்படி ஒன்றும் அறிவிப்பு வரவில்லை. இன்னமும் காதலர்களாகவே சுற்றி வருகின்றனர்.

SOURCER SIVAKUMAR
Previous articleடாக்டர்களைப் போன்று கவசங்களை அணிந்து கொண்ட பறந்த நடிகை!
Next articleகணவருக்கு முடி வெட்டி அழகு பார்த்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி உரிமையாளர்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here