Home சினிமா கோலிவுட் காஜல் அகர்வாலுக்கு அடித்த ஜாக்பாட்: விஜய்யுடன் 4ஆவது படமா?

காஜல் அகர்வாலுக்கு அடித்த ஜாக்பாட்: விஜய்யுடன் 4ஆவது படமா?

498
0
Kajal Aggarwal Thuppakki 2

Kajal Aggarwal; காஜல் அகர்வாலுக்கு அடித்த ஜாக்பாட்: விஜய்யுடன் 4ஆவது படமா?மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் உருவாக இருக்கும் தளபதி65 படத்தில் அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்க வாய்ப்பு அதிகம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை காஜல் அகர்வால் (Kajal Aggarwal). சூர்யா, விஜய், கார்த்தி, தனுஷ், விஷால், ஜீவா, அஜித், ஜெயம் ரவி, கமல் ஹாசன் என்று வரிசையாக மாஸ் ஹீரோக்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்.

அதிக முறை விஜய் உடன் இணைந்து நடித்துள்ளார். துப்பாக்கி (Thuppakki), ஜில்லா மற்றும் மெர்சல் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

தற்போது 4ஆவது முறையாகவும் விஜய் உடன் இணைந்து நடிக்க இருக்கிறார் என்று தகவல் வெளியாகி வருகிறது.

மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படம் தளபதி65 (Thalapathy65). இப்படத்திற்கு மகிழ் திருமேனி, சுதா கொங்கரா, லோகேஷ் கனகராஜ் என்று பல இயக்குநர்கள் பேச்சு அடிபட்டது. கடைசியாக ஏ.ஆர்.முருகதாஸ் பெயரும் அடிபட்டது.

ஏ.ஆர்.முருகதாஸ் – விஜய் கூட்டணியில் துப்பாக்கி, கத்தி மற்றும் சர்கார் ஆகிய படங்கள் வெளியாகியுள்ளன. மூன்று படங்களுக்குமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்த நிலையில், தான் தளபதி65 படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க இருப்பதாகவும், அது துப்பாக்கி 2 (Thuppakki2) என்றும் தகவல் வந்தது. அதோடு, தளபதி65 படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.

இதற்கிடையில், உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா காரணமாக சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் என்று ஒட்டுமொத்த நாடே வீட்டிற்குள் அடைபட்டு இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே படப்பிடிப்பும் ரத்து செய்யப்பட்டது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்தியன் 2 படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்துக்குப் பிறகு காஜல் அகர்வால் ஹே சினாமிகா என்ற தமிழ் படத்தில் பிஸியாக இருந்தார்.

கொரோனாவால் ஹே சினாமிகா படமும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், வீட்டில் முடங்கி இருக்கும் நடிகை காஜல் அகர்வால் சமூக வலைதளத்தில் ரசிகர்களுடன் உரையாடினார்.

அப்போது, நடிகர் விஜய் பற்றி கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அதற்கு பதிலளித்த காஜல், மீண்டும் விஜய்யுடன் இணைந்து நடிப்பதற்கு காத்திருப்பதாக கூறினார். அவருடன் பணியாற்றுவது என்பது மிகவும் பிடிக்கும். அவர் எனக்கு பிடித்த நடிகர்களில் ஒருவர் என்று கூறியுள்ளார்.

இதன் காரணமாக அடுத்து விஜய் நடிக்கும் படத்தில் அவர் நடிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே மூக்குத்தி அம்மன், அண்ணாத்த ஆகிய படங்களில் நயன்தாரா பிஸியாக இருப்பதால் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பில்லை. ஆதலால், இந்த முறை மார்க்கெட் காஜல் அகர்வால் பக்கம் திரும்பியுள்ளது.

ஏ.ஆர். முருகதாஸ் – விஜய் கூட்டணியில் துப்பாக்கி 2 உறுதி செய்யப்பட்டால், காஜல் அகர்வால் 4ஆவது முறையாக விஜய்யுடன் ஜோடி சேர்ந்து நடிக்க வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

SOURCER SIVAKUMAR
Previous articleஒலிம்பிக்கை ஒத்திவைத்த கொரோனா – புதிய அறிவிப்பு
Next articlevasantha navaratri: இராமர் விரதமிருந்த வசந்த நவராத்ரி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here