Home சினிமா கோலிவுட் உலக நடன தினம் இன்று!

உலக நடன தினம் இன்று!

332
1
World Dance Video

World Dance Day; உலக நடன தினம் இன்று! ஆண்டுதோறும் ஏப்ரல் 29 ஆம் தேதி உலக நடன தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று உலக நடன தினம் கொண்டாடப்பட்டது. இதையடுத்து, பிரபலங்கள் பலரும் தங்களது டான்ஸ் வீடியோவை வெளியிட்டு வருகின்றனர்.

இன்று உலக நடன தினம் கொண்டாடப்படுகிறது.

கடந்த 1982 ஆம் ஆண்டு யுனெஸ்கோ நிறுவனத்தின் கலாச்சார ஊக்குவிப்பின் கீழ் சர்வதேச நடன சபை International Dance Council (CID) ஏற்படுத்தப்பட்டது.

கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் இச்சபையின் மூலமாகவே உலக நடன தின ஏற்பாடுகள் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது.

இது, நடனக் கலைஞர் ஜான் ஜார்ஜ் நூவர் என்பவரின் பிறந்த தினம் ஆகும். பிரெஞ்ச் நடனக்கலைஞரான இவர் பாலே நடனக் கலையில் சிறந்து விளங்கியவர்.

அதே ஆண்டில், நடன தினம் பற்றிய செய்தியை சர்வதேச நடன சபையின் தலைவர் பேராசிரியர் அல்கீஸ் ராப்டிஸ் வெளியிடார்.

அதில், அரசு அறிவிக்கும் வரவு செலவு திட்டத்தில் நடனக்கலையை ஊக்குவிக்கும் வகையில் எத்தகைய நிதி ஒதுக்கீடுகளையும் செய்யப்படுவதில்லை என்றார்.

இதையடுத்து, கடந்த 2005 ஆம் ஆண்டில் நடன தினத்தின் கவனம் முழுவதும் ஆரம்பக் கல்வியின் மூலமாக நடனத்தை கற்றுத்தருவதை நோக்கமாக கொண்டிருந்தது.

நடன பயிற்சியாளர்கள், நடன பயிற்சி பள்ளிகள் ஆகியவை தங்களது நாடுகளின் கல்வி, கலாச்சார அமைப்புகளை தொடர்பு கொண்டு பள்ளிகளில் நடன தின விழாவைக் கொண்டாடுவதற்காக அனைத்து ஏற்பாடுகளையும் செய்யப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தியது.

இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் குறிப்பிட்ட நடனம் சிறப்பாக இருக்கிறது.

தமிழ்நாடு – பரதநாட்டியம், கோலாட்டம், கும்மியாட்டம், தெருக்கூத்து, கேரளாவில் சாக்கியார் கூத்து, கதகளி, மோகினி ஆட்டம், ஓட்டம் துள்ளல், தாசி ஆட்டம், கூடி ஆட்டம், கிருஷ்ணா ஆட்டம்,

ஆந்திரா – குச்சுப்பிடி, கோட்டம், வீதி பகவதம்.

கர்நாடகா – யக்ஷகானம்

ஒரிஸ்ஸா – ஒடிசி

மணிப்பூர் – மணிப்புரி, லாய்-ஹரோபா

பஞ்சாப் – பாங்ரா, கிட்டா

பீகார் – பிதேஷியா, ஜட்டா-ஜட்டின், லாகூய், நாச்சாரி

அஸ்சாம் – பிகு

ஜம்மு-காஷ்மீர் – சக்ரி, ரூக்ப்.

இந்தியாவின் கிராமிய நடனங்களை பல்வேறு வகையாக பிரிக்கலாம்.

தென்னிந்தியக் கிராமிய நடனங்கள்: தேவராட்டம், தொல்லு குனிதா, தண்டரியா, கரகம், கும்மி, கூட்டியாட்டம், படையணி, கோலம் (நடனம்) இலவா, நிக்கோபாரிய நடனம்.

வட இந்தியக் கிராமிய நடனங்கள்: டும்ஹால் இரூவ்ப், லாமா நடனம், பங்கி நடனம், பங்காரா, ராஸ், கிட்டா, தம்யால் டுப், லகூர், துராங், மாலி நடனம், தேரா தலி.

கிழக்கிந்தியக் கிராமிய நடனங்கள்: நாகா நடனம், ஹஸாகிரி, மூங்கில் நடனம், நொங்கிறேம், பிகு, தங்-டா, கர்மா, பொனுங், பிரிதா ஓர் வ்ரிதா, ஹுர்க்கா பாவுல், காளி நாச், கண்ட பட்டுவா, பைக், தல்காய் ஆகியவை.

மேற்கிந்திய நடனங்கள்: கெண்டி, பகோரியா நடனம், ஜாவார் இகர்பா, தாண்டியா, காலா டிண்டி, மண்டோ. காதலர் தினம் படத்தில் வரும் தாண்டியா ஆட்டம் என்ற பாடல் மேற்கிந்திய நடனத்தை குறிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர், நடிகைகள் தங்களது நாடு மற்றும் மாநிலத்திற்கு ஏற்ப அவரவர் நடன கலைகளில் சிறந்து விளங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SOURCER SIVAKUMAR
Previous articleஹாலிவுட்டில் நடித்து புகழ்பெற்ற இந்தி நடிகர் இர்பான் கான் மரணம்
Next articleஉலக நடன தினம்: அசத்தல் டான்ஸ் வீடியோ வெளியிட்ட கிகி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here