Home சினிமா கோலிவுட் ரசிகர்களின் கனவுக் கன்னி த்ரிஷாவின் பர்த்டே டுடே!

ரசிகர்களின் கனவுக் கன்னி த்ரிஷாவின் பர்த்டே டுடே!

0
456
HBD Trisha

ரசிகர்களின் கனவுக் கன்னி த்ரிஷாவின் பர்த்டே டுடே! நடிகை த்ரிஷா இன்று தனது 37 ஆவது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுகிறார்.

த்ரிஷாவின் பிறந்தநாள் இன்று.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை த்ரிஷா.

சென்னையில் பிறந்து வளர்ந்த த்ரிஷா ஆரம்ப முதலே மாடலிங்கில் அதிக் ஆர்வம் கொண்டவர்.

கடந்த 1999 ஆம் ஆண்டு நடந்த மிஸ் மெட்ராஸ் அழகிப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். இதே போன்று பல போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றியும் பெற்றுள்ளார்.

இதன் மூலம் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளது. ஆம், இயக்குநர் பிரவீன் காந்தி இயக்கத்தில் பிரசாந்த், சிம்ரன், விஜயகுமார் ஆகியோரது நடிப்பில் வந்த ஜோடி படத்தில் சிம்ரனுக்கு தோழியாக நடித்திருந்தார்.

இதையடுத்து, 2002 ஆம் ஆண்டு வந்த மௌனம் பேசியதே படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.

இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, அடுத்தடுத்து, பல படங்களில் ஹீரோயினாக நடித்தார்.

சாமி, கில்லி, திருப்பாச்சி, ஆறு, ஆதி, மங்காத்தா, அரண்மனை 2, நாயகி, 96, பேட்ட என்று மாஸ் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

தற்போது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், இன்று தனது 37 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here