Trisha; விஜய், அஜித்தை பிடிக்காத த்ரிஷாவுக்கு இவர்களைத் தான் பிடிக்குமாம்! எப்போதும், சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் த்ரிஷா தனக்கு பிடித்த மூன்று முக்கியமான நடிகர்களின் பெயர்களை தெரிவித்துள்ளார்.
தனக்கு இந்த மூன்று நடிகர்களைத் தான் பிடிக்கும் என்று நடிகை த்ரிஷா தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை த்ரிஷா. தற்போது ஓரிரு படங்களில் மட்டும் நடித்து வருகிறார்.
தற்போது லாக்டவுன் காரணமாக வீட்டிலேயே இருக்கும் த்ரிஷா ரசிகர்களுடன் உரையாடுவது, டிக் டாக்கில் வீடியோ வெளியிடுவது என்று பிஸியாக இருக்கிறார்.
ரசிகர்களுடன் உரையாடும் போது அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்து வருகின்றார். அந்த வகையில், த்ரிஷாவிடம் பல்வேறு கேள்விகளை ரசிகர்கள் கேட்டுள்ளனர்.
அதற்கு பதிலளித்த த்ரிஷா கூறுகையில், தனக்குப் பிடித்த பாடல் மன்னிப்பாயா என்றும், பிடித்த வெப் சீரிஸ் செக்ஸ் அண்ட் சிட்டி என்ற தொடரையும் குறிப்பிட்டு கூறியுள்ளார்.
மேலும், தனக்கு பிடித்த முக்கியமான 3 நடிகர்களின் பட்டியலை அவர் வெளியிட்டுள்ளார். அதில், முதலிடத்தில் கமல் ஹாசனும், 2ஆவது இடத்தில் மோகன் லாலும், 3ஆவது இடத்தில் அமீர் கானும் இருக்கின்றனர்.
என்னதான் கோலிவுட்டில் தல, தளபதி உடன் த்ரிஷா இணைந்து நடித்திருந்தாலும், அவர்களது பெயரை தனக்கு பிடித்த ஹீரோக்களின் பட்டியலில் அவர் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.