Home சினிமா கோலிவுட் AnnatheSethi First Single: துக்ளக் தர்பார் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

AnnatheSethi First Single: துக்ளக் தர்பார் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

473
0
Annathe Sethi First Single

Tughlaq Durbar First Single Track; துக்ளக் தர்பார் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு! விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் துக்ளக் தர்பார் படத்தின் முதல் சிங்கிள் டிராக் அண்ணாத்தே சேதி பாடல் லிரிக் வீடியோ வரும் 3 ஆம் தேதி வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

துக்ளக் தர்பார் படத்தின் முதல் சிங்கிள் டிராக் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில், மாமனிதன், லாபம்,

துக்ளக் தர்பார், கடைசி விவசாயி, புஷ்பா, யாதும் ஊரே யாவரும் கேளிர், க/பெ.ரணசிங்கம், காத்து வாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் துக்ளக் தர்பார். வயகாம் 18 ஸ்டூடியோஸ் மற்றும் 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் இணைந்து இந்தப் படத்தை தயாரித்து வருகிறது.

கோவிந்த வசந்தா இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். துக்ளக் தர்பார் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அதிதி ராவ் நடித்து வருகிறார்.

மேலும், பார்த்திபன் இந்தப் படத்தில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மையில், துக்ளக் தர்பார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இதையடுத்து, விஜய் சேதுபதி மற்றும் பார்த்திபன் இருவரும் அரசியல் கெட்டப்பில் இருக்கும் அருமையான புகைப்படங்கள் எல்லாம் வெளி வந்தது.

இந்த நிலையில், துக்ளக் தர்பார் படத்தின் முதல்  சிங்கிள் டிராக் அண்ணாத்தே சேதி என்ற பாடலின் லிரிக் வீடியோ எப்போது வெளிவரும் என்பது குறித்து முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி, வரும் 3 ஆம் தேதி மாலை 5 மணிக்கு அண்ணாத்தே சேதி பாடலின் லிரிக் வீடியோ வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக துக்ளக் தர்பார் படத்தின் எக்ஸ்க்ளூசிவ் புகைப்படம் வெளியானது. நேற்று விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் லாபம் படத்தின் டப்பிங் புகைப்படம் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

Annathe Sethi First Single

Previous articleவாய்ப்பு கேட்ட மாளவிகா மோகனனுக்கு கிடச்ச லக்!
Next articleVirat Kohli: தமன்னா, விராட் கோலியை கைது செய்ய வாய்ப்பு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here