Home சினிமா கோலிவுட் கணவர் பீட்டர் பால் மீது புகார்: கூலாக பதில் சொன்ன வனிதா!

கணவர் பீட்டர் பால் மீது புகார்: கூலாக பதில் சொன்ன வனிதா!

267
0
Vanitha Reacts For Complaint

Vanitha Peter Paul; கணவர் பீட்டர் பால் மீது புகார்: கூலாக பதில் சொன்ன வனிதா! கணவர் பீட்டர் பால் மீது அவரது முன்னாள் மனைவி ஹெலன் எலிசபெத் வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

கணவர் பீட்டர் பால் மீது அவரது முன்னாள் மனைவி அளித்துள்ள புகார் குறித்தி வனிதா கூலாக பதில் கூறியுள்ளார்.

விஜயகுமாரின் மூத்த மகளான வனிதா கடந்த 1995 ஆம் ஆண்டு சந்திரலேகா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.

இந்தப் படத்திற்கு அவர் நடித்த படங்கள் போதுமான வரவேற்பு பெறாத நிலையில், சினிமாவில் இருந்து ஒதுங்கினார். கடந்தாண்டு ஆகாஷ் என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஆகாஷ் என்ற மகனும், ஜோவிகா என்ற மகளும் இருக்கின்றனர்.

கருத்து வேறுபாடு கரணமாக 2007 ஆம் ஆண்டு இருவரும் பிரிந்தனர். தொடர்ந்து அதே ஆண்டில், ராஜன் ஆனந்த் என்பவரை 2ஆவதாக திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதியினருக்கு ஜெயந்திகா என்ற மகள் இருக்கிறார். இந்த திருமணமும், 2010 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது.

இந்த நிலையில், தற்போது வனிதா 3ஆவதாக பீட்டர் பால் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ஆனால், கொஞ்ச நேரத்திலேயே பீட்டர் பால் மீது அவரது முதல் மனைவி எலிசபெத் ஹெலன் (41) சென்னை வட பழனி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

2 குழந்தைகளுடன் 7 வருடங்களாக பிரிந்து வாழும் தன்னை விட்டு விட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாகவும், இன்னும் விவாகரத்து கூட பெறவில்லை என்றும் பீட்டர் பால் மீது புகார் அளித்துள்ளார்.

இது சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. திருமணம் செய்து கொள்ளப்போவது முன்னதாகவே தெரிந்த நிலையில், ஏன், திருமணம் செய்து கொண்ட பிறகு புகார் அளித்துள்ளார் என்பது பலரது கேள்வியாக உள்ளது.

இந்த நிலையில், இந்த புகார் குறித்து மிகவும் கூலாக வனிதா பதில் அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:

எலிசபெத் ஹெலன் கொடுத்த புகாரால் நான் என்னவோ ஏமாந்துவிட்டதாக பலரும் நினைக்கிறார்கள். நான் ஒன்றும் ஏமாறவில்லை.

கடந்த 8 வருடங்களுக்கு முன்னரே தனது மனைவியை பீட்டர் பால் பிரிந்துவிட்டார். அவரைப் பற்றி முழுமையாக எனக்கு தெரியும். இருவருமே தனித்தனியாகத்தான் வாழ்ந்து வந்தார்கள்.

அவர்களுக்கு இடையில் எந்த பேச்சுவார்த்தையும் கிடையாது. இந்தப் பிரச்சனையை எங்களது வழக்கறிஞர் பார்த்துக் கொள்வார்.

எலிசபெத் ஹெலன் ஒரு கோடி ரூபாய் கேட்பதாகச் சொல்கிறார்கள். அவ்வளவு பணத்துக்கு நாங்கள் எங்கே போவது? இந்த புகார் காரணமாக எனது திருமண வாழ்க்கையில், எந்தப் பிரச்சனையும் இல்லை.

பணம் பறிப்பதற்காகச் இப்படி செய்கிறார்கள். இந்தப் பிரச்சனையை சட்ட ரீதியாக நாங்கள் எதிர்கொள்வோம் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleசிம்புவின் கெட்டவன் முடியவேயில்லை: லேகா வாஷிங்டன் வருத்தம்!
Next articleடாப்ஸி மின் கட்டணம்: மும்பையில், மின் கட்டண கொள்ளை!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here