வர்மாவை குருமாவாக்கிய பாலா; விக்ரமும் தயாரிப்பாளரும் அதிர்ச்சி
விஜய் தேவரகொண்டா நடிப்பில் தெலுங்கில் வெளிவந்து பட்டிதொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பிய படம் அர்ஜுன் ரெட்டி.
இதற்கு முன்னர் மலையாளத்தில் வெளிவந்த ப்ரேமம் படம் இதேபோல் சக்கைபோடு போட்டது. அதைத் தெலுங்கில் ரீமேக் செய்தார்கள். ஆனால் அது ரசிக்கும்படியாக இல்லை.
காரணம், ஒரு நாயகனை மனதில் நிறுத்திவிட்டு, இன்னொருவரை அதே வேடத்தில் நினைத்துப்பார்க்க முடியாது.
அதேபோன்றே அர்ஜுன் ரெட்டியும். இந்த படத்தின் மூலம் விஜய் தேவரகொண்டாவிற்கு தமிழ்நாட்டில் அதிக ரசிகர் படை உருவானது.
படத்தை டப் செய்து வெளியிட்டாலே பயங்கரமாக ஓடியிருக்கும். ரீமேக் செய்ய முடிவு செய்தார்கள். விக்ரம் மகன் துரூவ் நாயகனாக நடித்தார்.
பர்ஸ்ட் லுக் வெளியானபோதே பயங்கரமாக கலாய்க்கப்பட்டார். இருப்பினும் டீசரில் ஓரளவு ஏற்றுக்கொள்ளும் படியாகவே இருந்தது அவருடைய நடிப்பு.
வர்மா 100 சவீதம் படப்பிடிப்பு முடிந்த நிலையில், படத்தை கைவிடுவதாக அறிவித்துள்ளது படத்தயாரிப்பு நிறுவனம்.
காரணம் பாலா, அர்ஜூன் ரெட்டியை அப்படியே எடுக்கவில்லையாம். குறிப்பாக கிளைமேக்சை முற்றிலும் மாற்றி எடுத்துள்ளார்.
அதில் வழக்கம்போல பாலாவின் சைக்கோ தனக் காட்சிகளும், இரத்தவெறிக் காட்சிகளும் உள்ளதாம்.
படத்தை பார்த்த விக்ரமுக்கும், தயாரிப்பாளருக்கும் அதிர்ச்சிமேல் அதிர்ச்சி. இப்படத்தை அப்படியே வெளியிட்டால் படுதோல்வி அடையும்.
எனவே, பாலாவிடம் பலகட்டப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். பாலாவின் மனதை மாற்ற முடியவில்லை. இதனால் பாலாவையே மாற்றிவிட படத்தின் தயாரிப்பாளர் முடிவு செய்துவிட்டார்.
பாலா என்றாலே யார் சொல்லையும் கேட்கமாட்டார். அவர் நோக்கத்திற்கு செயல்படுவார் என அவர்மீது ஏகப்பட்ட விமர்சனங்கள் உண்டு.
இனி பாலா அப்படி ஏதும் செய்யமாட்டார் என படத்தின் தயாரிப்பாளரே பாலாவிற்கு சர்டிபிக்கேட் கொடுத்து படப்பிடிப்பைத் துவங்கினார்.
தற்பொழுது அவரே பாலாவை நீக்குவதாக அறிவித்துள்ளார். பாலா இன்னும் மாறவில்லை, மாற்றவும் முடியாது என்பது இதன்மூலம் நிரூபணம் ஆகிவிட்டது.
பாலாவின் திரையுலகப் பயணம் இதற்கு மேல் எடுபடுமா என்பது கேள்விக்குறியே?