Home சினிமா கோலிவுட் டுவிட்டரில் டிரெண்டாகும் #VersatileStarAjithBdayIn300D ஹேஷ்டேக்!

டுவிட்டரில் டிரெண்டாகும் #VersatileStarAjithBdayIn300D ஹேஷ்டேக்!

348
0
Thala 50th Birthday

Thala Ajith 50th Birthday; டுவிட்டரில் டிரெண்டாகும் #VersatileStarAjithBdayIn300D ஹேஷ்டேக்! தல அஜித்தின் பிறந்தநாளுக்கு இன்னும் 300 நாட்கள் இருக்கிறது என்று கூறும் டுவிட்டர் ஹேஷ்டேக்கை உருவாக்கி தல ரசிகர்கள் டிரெண்டாக்கி வருகின்றனர்.

கடந்த மே 1 ஆம் தேதி அஜித் தனது 49 ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். இதையடுத்து, தற்போது டுவிட்டரில் அடுத்த பிறந்தநாளுக்கு இன்னும் 300 நாட்கள் இருக்கிறது என்று கூறும் டுவிட்டர் ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அஜித் குமார். தனது கடின உழைப்பு, விடா முயற்சி, தன்னம்பிக்கை ஆகியவற்றின் மூலம் முன்னுக்கு வந்தவர்.

தல என்றாலே தன்னம்பிக்கை லட்சியம். தொடர்ந்து, ஏராளமான ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.

கடந்த ஆண்டு விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை ஆகிய இரு படங்களில் நடித்து ஹிட் கொடுத்தார். தற்போது, வலிமை படத்தில் நடித்து வருகிறார்.

வலிமை படத்தின் படப்பிடிப்பு கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு முற்றிலும் சரியான பிறகே வலிமை படத்தின் படப்பிடிப்பை தொடங்க வேண்டும் என்று தயாரிப்பாளர் போனி கபூருக்கு தல அஜித் வேண்டுகோள் வைத்துள்ளார்.

தனது 49 ஆவது பிறந்தநாளை யாரும் கொண்டாட வேண்டாம் என்றும், பேனர்கள், கட் அவுட், போஸ்டர்கள் ஆகியவை வேண்டாம் என்றும் அஜித் கேட்டுக்கொண்டுள்ளார். இதன் காரணமாக அவரது ரசிகர்கள் தல பிறந்தநாளை கொண்டாடவில்லை.

இந்த நிலையில், அஜித்தின் 49 ஆவது பிறந்தநாள் முடிந்து, 65 நாட்கள் மட்டுமே ஆன நிலையில், 50 ஆவது பிறந்தநாளுக்கு இன்னும் 300 நாட்கள் இருப்பதாக கூறி டுவிட்டரில், VersatileStarAjithBdayIn300D என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here