Home சினிமா கோலிவுட் அடுத்தடுத்து சாதனை படைக்கும் சூரரைப் போற்று: வெய்யோன் சில்லி 10 மில்லியன் வியூஸ்!

அடுத்தடுத்து சாதனை படைக்கும் சூரரைப் போற்று: வெய்யோன் சில்லி 10 மில்லியன் வியூஸ்!

466
0
Veyyon Silli Song

Veyyon Silli Song; அடுத்தடுத்து சாதனை படைக்கும் சூரரைப் போற்று: வெய்யோன் சில்லி 10 மில்லியன் வியூஸ்! சூர்யாவின் சூரரைப் போற்று படத்தில் இடம்பெற்றுள்ள வெய்யோன் சில்லி பாடல் யூடியூப்பில் 10 மில்லியன் வியூஸ் பெற்றுள்ளது.

வெய்யோன் சில்லி பாடல் 10 மில்லியன் வியூஸ் பெற்றுள்ளது.

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் சூரரைப் போற்று. ஏர் டெக்கான் நிறுவன ஜிஆர் கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி சூரரைப் போற்று படம் உருவாக்கப்பட்டுள்ளது.

சூரரைப் போற்று படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார்.

மேலும், கருணாஸ், மோகன் பாபு, ஊர்வசி, ஜாக்கி ஷெராஃப், காளி வெங்கட் ஆகியோரும் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்தப் படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமே தயாரித்துள்ளது.

வரும் மே மாதம் திரைக்கு வரயிருந்த இப்படத்தின் ரிலீஸ் தேதி கொரோனாவால் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள வெய்யோன் சில்லி பாடல் யூடியூப்பில் 10 மில்லியன் வியூஸ் பெற்றுள்ளது.

ஜிவி பிரகாஷ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். வெய்யோன் சில்லி பாடலுக்கு விவேக் பாடல் வரிகள் அமைத்துக் கொடுத்துள்ளார். ஹரிஷ் சிவராமகிருஷ்ணன் பாடலை பாடியுள்ளார்.

இதற்கு முன்னதாக சூரரைப் போற்று மேக்கிங் வீடியோ வெளியிடப்பட்டது.

இந்த வீடியோ வெளியான 2 நாட்களில் 1 மில்லியன் வியூஸ் பெற்று சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யா இயக்குநர் ஹரி இயக்கத்தில் அருவா என்ற படத்தில் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here