Nayanthara baby: கல்யாணமே ஆகல அதுக்குள்ள காதலி, குழந்தை அன்னையர் தின வாழ்த்து சொன்ன விக்னேஷ் சிவன்! தனது குழந்தைக்கு அம்மாவாக போகும் நடிகை நயன்தாராவிற்கு காதலன் விக்னேஷ் சிவன் அன்னையர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.
காதலிக்கும், எதிர்காலத்தில் வரும் குழந்தைக்கும் விக்னேஷ் சிவன் அன்னையர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை நயன்தாரா. விஜய், அஜித், ரஜினிகாந்த், ஆர்யா, விஜய் சேதுபதி, ஜெயம் ரவி என்று மாஸ் ஹீரோக்களுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
தற்போது ரஜினி நடிப்பில் உருவாகி வரும் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் காதலித்து வருவது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.
இருவரும் தங்களது புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
இன்னும் திருமணம் குறித்து அறிவிக்காத நிலையில், நயன்தாரா கையில் இருக்கும் குழந்தை குறித்து விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், எதிர்காலத்தில் வரும் என் குழந்தையின் அம்மாவிற்கு அன்னையர் தின வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.
திடீரென நயன்தாரா கையில் குழந்தையுடன் (Nayanthara baby) புகைப்படம் போட்டதால், நயன்தாரா கர்ப்பமாக உள்ளாரா? இல்லை இது நயன்தாரா குழந்தையா?
லக்டவுனின் எங்க தலைவி நயன்தாராவை என்ன பண்ணிங்க உண்மைய சொல்லுங்க என ரசிகர்கள் கமெண்ட் செய்ய ஆரம்பித்து விட்டனர். தற்போது இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.