Home சினிமா கோலிவுட் விஜய்யின் முடிவு என்ன? தளபதி 65 படம் யாருடன்?

விஜய்யின் முடிவு என்ன? தளபதி 65 படம் யாருடன்?

447
0
விஜய்யின் முடிவு என்ன? தளபதி 65 படம் யாருடன்? வரிசையாய் கதை சொல்லும் இயக்குனர்கள் போட்டி போடும் தயாரிப்பாளர்கள்

விஜய்யின் முடிவு என்ன? தளபதி 65 படம் யாருடன்? விஜய் தான் வேண்டும்; போட்டி போடும் தயாரிப்பாளர்கள். வரிசையாய் கதை சொல்லும் இயக்குனர்கள்.

மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் உருவாக இருக்கும் தளபதி 65 படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாஸ்டர் ஏப்ரல் வெளியீடு

கார்த்தியின் கைதி படத்தை இயக்கிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் மாஸ்டர். வரும், ஏப்ரல் 9-ஆம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது.

எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இதில், விஜய்யுடன் இணைந்து விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஸ்ரீமன் உள்பட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இசைவெளியீடு அனுமதி மறுப்பு

அண்மையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் டிராக் குட்டி ஸ்டோரி லிரிக்ஸ் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது.

இதையடுத்து, வரும் மார்ச் மாதம் மாஸ்டர் இசை வெளியீட்டு விழா நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. அது சென்னையா இல்லை கோயம்புத்தூரா என்பது குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவிற்கு சென்னையில் அனுமதி மறுக்கப்பட்டதாக தகவல் பரவி வருகிறது.

தளபதி 65 படம் யாருடன்?

இந்த நிலையில், இப்படத்தைத் தொடர்ந்து, விஜய் நடிக்கும் தளபதி 65 படத்தின் இயக்குநர் யார் என்பது பற்றி பல வதந்திகள் பரவி வந்தது.

இதற்கிடையில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது அடுத்த படத்திற்காக மாஸ் ஹீரோவான விஜய்யின் கால் ஷீட்டை வாங்கிவிட்டது.

இதற்காக மாஸ் இயக்குநர்களான வெற்றிமாறன், அருண்ராஜா காமராஜ், சுதா கொங்கரா, பாண்டிராஜ், மகிழ் திருமேனி என்று பல இயக்குநர்களிடம் விஜய் கதை கேட்டு வந்துள்ளார்.

விஜய்யை கவர்ந்த சுதா கொங்கரா

இதில், ஒரு சில கதைகள் விஜய்க்கு பிடித்துப் போய்விட்டதாம். எனினும், சூர்யாவின் சூரரைப் போற்று படத்தைப் பார்த்த விஜய்,  சுதா கொங்கராவை பாராட்டி உள்ளார்.

அவரது படத்தில் நடிக்கவும் ஒப்புக் கொண்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில், தற்போது மற்றொரு இயக்குநர் பெயரும் அடிபடுகிறது.

அவர் வேறு யாரும் இல்லை. மாஸ்டர் படத்தை இயக்கி வரும் லோகேஷ் கனகராஜ் தானாம்.

விஜய்யின் முடிவு என்ன?

படப்பிடிப்பின் போது விஜய் கதை கேட்டு வந்ததாகவும், அந்தக் கதை விஜய்க்கு பிடித்துப் போய்விட்டதாகவும் கூறப்படுகிறது.

அதனால், தளபதி 65 படத்தை லோகேஷ் கனகராஜே இயக்க வாய்ப்பிருப்பதாக தகவல் பரவி வருகிறது.

இது ஒருபுறம் இருக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்குப் பதிலாக, கைதி படத்தை தயாரித்த ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க இருக்கிறதாம்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரையில் இன்னும் பல இயக்குநர்கள், தயாரிப்பாளர்களின் பெயர் அடிபடும் என்று தெரிகிறது.

இதற்கு முன்னதாக வந்த விஜய்யின் சர்கார் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மாஸ்டர் படம் வெளியான பிறகு தளபதி 65 படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Previous articleVijay IT Raid: விஜய், அன்புச் செழியன் ஆவணங்கள் ஒப்படைப்பு!
Next articleThalaivar169: ரஜினியுடன் கூட்டணி சேர்ந்த கமல் ஹாசன்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here