Home சினிமா கோலிவுட் வில்லன் விஜய் சேதுபதியின் பொலக்கட்டும் பற பற பாடல் லிரிக் வீடியோ வெளியீடு!

வில்லன் விஜய் சேதுபதியின் பொலக்கட்டும் பற பற பாடல் லிரிக் வீடியோ வெளியீடு!

0
645
Master Polakattum Para Para Lyric

Master Polakattum Para Para Lyric; வில்லன் விஜய் சேதுபதியின் பொலக்கட்டும் பற பற பாடல் லிரிக் வீடியோ வெளியீடு! மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள பொலக்கட்டும் பற பற பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பொலக்கட்டும் பற பற பாடல் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது.

மாஸ்டர் படத்தின் பொலக்கட்டும் பாடல் லிரிக் வீடியோ வெளி வந்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் மாஸ்டர்.

கல்வித்துறையில் நடக்கும் ஊழல் முறையை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மாஸ்டர் இசை வெளியீடு அண்மையில் நடந்து முடிந்தது. இதையடுத்து, படத்தின் இடம்பெற்றுள்ள மொத்தம் 12 பாடல்களில் 8 பாடல்கள் மட்டுமே ஜூக்பாக்ஸில் இடம்பெற்றுள்ளது.

கடந்த 22 ஆம் தேதி மாஸ்டர் டிரைலர் வெளியாக இருந்த நிலையில், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதையடுத்து, டிரைலர் குறித்து எந்த அறிவிப்பும் வரவில்லை. மாறாக விஜய் நடித்த படங்கள் ஒவ்வொரு சேனலிலும் ஒளிபரப்பு செய்யப்பட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இது ஒரு புறம் இருக்க, மாஸ்டர் அறிவித்தபடி ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வரும் 14 ஆம் தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து மாஸ்டர் படத்தின் ரிலீஸ் மே மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கின்றது. எனினும், மாஸ்டர் குறித்து முறையான ரிலீஸ் தேதி விரைவில் வரும் என்று தெரிகிறது.

இந்த நிலையில், மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள பொலக்கட்டும் பற பற பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. இதில், விஜய் சேபதி, கோயிலுக்கு சாமி கும்பிட வந்தபோது இந்தப் பாடல் பாடுவது போன்று காட்டப்பட்டுள்ளது.

மேலும், இந்தப் பாடலுக்கு விஜய் சேதுபதி குத்தாட்டம் ஆடுவது போன்று தெரிகிறது. இன்று வெளியான பொலக்கட்டும் பற பற பாடலை 4 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்து மகிழ்ந்துள்ளனர்.

மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி பவானி என்ற கதாபாத்திரத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்துள்ளார். வரும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு மாஸ்டர் டிரைலர் வரும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். அன்றுடன் ஊரடங்கு உத்தரவும் முடிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here